| ADDED : ஆக 22, 2026 01:30 AM
- நமது நிருபர் - வீட்டிலேயே எளிமையான முறையில் வாழைப்பழ அல்வா செய்யலாம். தேவையான பொருட்கள் l பழுத்த வாழைப்பழம் - 4 l நெய் - 4 டீஸ்பூன் l சர்க்கரை - 1/2 கப் l முந்திரி, திராட்சை -தேவையான அளவு செய்முறை தோலுரித்த வாழைப்பழங்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். அதே வாணலியில் அரைத்த வாழைப்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். ஐந்து நிமிடங்களுக்கு பின், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அல்வா பதம் வந்ததும், வறுத்து வைத்த முந்திரி, திராட்சைகளை போடவும். அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ அல்வா தயார்!