மேலும் செய்திகள்
சைனீஸ் ரெசிபி 'டிராகன் சிக்கன்'
21-Mar-2026
- நமது நிருபர் - பலரின் வீடுகளில், இரவிலோ, பகலிலோ சப்பாத்தி அன்றாட உணவாக இருக்கும். சில நேரங்களில் சப்பாத்தி மீதியாகி விடும். குப்பையில் வீசுவர். சப்பாத்தியை வீணாக்க தேவையில்லை. அதில், சுவையான நுாடுல்ஸ் மசாலா செய்யலாம். தேவையான பொருட்கள் * சப்பாத்தி - மூன்று முதல் நான்கு * எண்ணெய் - 1 ஸ்பூன் * இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன் * பச்சை மிளகாய் - 2 * வெங்காயம் - 1 * கேரட் - 1 * குடமிளகாய் - 1 கப் * தக்காளி - 1 * உப்பு - தேவையான அளவு * தக்காளி சாஸ் - 1 ஸ்பூன் * சோயா சாஸ் -1 ஸ்பூன் சில்லி சாஸ் - 1 ஸ்பூன் செய்முறை முதலில் சப்பாத்திகளை கத்தியால், நுாடுல்ஸ் போன்று நீள, நீளமாக மெல்லியதாக வெட்டி கொள்ளவும். அதன்பின் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு, சில நிமிடங்கள் வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய் போட்டு மூன்று நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறவும். காய்கறிகள் வெந்த பின், தேவையான உப்பு சேர்க்கவும். சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும். அதன்பின் நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, கை விடாமல் கிளறவும். இரண்டு, மூன்று நிமிடம் கிளறினால் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயார். பள்ளி செல்லும் சிறார்களுக்கு டிபன் பாக்சில் கொடுத்தனுப்பலாம். மாலை டிபனுக்கு ஏற்றது.
21-Mar-2026