சுவையான அன்னாசி பழ பாயசம்
நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது சாப்பிட வேண்டிய உணவுகள் என்ற பட்டியலை தயாரித்தால், அன்னாசி பழ பாயசத்திற்கு முதலிடம் தரலாம். அப்படிப்பட்ட ஓர் சுவை. இதை சாப்பிடும் போது, பாயசமா அல்லது தேவாமிர்தமா என்ற மிரட்சி மனதிற்குள் எழும். இதை செய்வதற்கு தேவையான பொருட்கள், செய்முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டு உள்ளன. படித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் அன்னாசி பழ துண்டுகள் - 1 கப் காய்ச்சிய பால் - 1 லிட்டர் ஜவ்வரிசி -1/2 கப் பைனாபிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன் நெய் தேவையான அளவு முந்திரி - 15 உலர் திராட்சை - 15 கன்டென்ஸ்டு மில்க் - 1 கப் செய்முறை அன்னாசி பழத்தின் தோல்களை நீக்கிய பின், அவற்றை ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். ஜவ்வரிசியை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில், ஜவ்வரிசியை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். தண்ணீர் வற்றிய பிறகு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வேறு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவைக்கவும். பால் கொதித்த பின், வெட்டி வைத்த அன்னாசி துண்டுகளை போடவும். இதில், ஏற்கனவே கொதிக்க வைத்த ஜவ்வரிசியை போட்டு 3 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பின், அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட வேண்டும். இறுதியாக அன்னாசி எசன்ஸ், நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரியை சேர்க்க வேண்டும். அவ்வளவு தான், சுவையான அன்னாசி பழ பாயசம் தயார். இதன் சுவை நிச்சயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். இதில், சந்தேகமே வேண்டாம். ஒரு முறை சிரமப்படாமல் செய்து பாருங்கள். பின், அதன் சுவையில் மீண்டும் மீண்டும் செய்வீர்கள். - நமது நிருபர் -: