உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  மாப்பிள்ளை சம்பா இட்லி!

 மாப்பிள்ளை சம்பா இட்லி!

- நமது நிருபர் -: கம்பு, கேழ்வரகு, தினை, சோளம் போன்ற சிறு தானியங்களால் செய்யப்படும் கூழ், சாப்பாடு போன்றவை, மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வந்தனர். உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். இதையே நம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லி செய்து கொடுங்கள். உடலுக்கு ஆரோக்கியமானது. தேவையான பொருட்கள் மாப்பிள்ளை சம்பா அரிசி --- 6 கப் பச்சரிசி -- 2 கப் உளுந்து -- 1 கப் வெந்தயம் -- சிறிதளவு செய்முறை : வழக்கமாக செய்யும் இட்லிக்கு, மாவு அரைப்பது போல உளுந்து மற்றும் வெந்தயத்தை, 2 மணி நேரம் ஊற வைக்கவும். மாப்பிள்ளை அரிசியை, பச்சரிசி இரண்டையும் 5 மணி நேரம் தண்ணீரில் ஊற்றி ஊற வைக்க வேண்டும். முதலில் ஊற வைத்துள்ள வெந்தயம் மற்றும் உளுந்தை நைசாக அரைத்துக் கொள்ளவும். பின், ஊற வைத்துள்ள அரிசியை, கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். 5 மணி நேரத்திற்கு மேலாக ஊற வைத்தாலும், அரைப்பதற்கு நேரம் எடுக்கும். எனவே, கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு அரைப்பது நல்லது. அரிசி மற்றும் உளுந்து மாவு இரண்டையும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு புளித்ததும் இட்லி பாத்திரத்தில் இட்லியை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான, ஆற்றல் நிறைந்த மாப்பிள்ளை சம்பா இட்லி தயார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை