| ADDED : டிச 27, 2025 06:19 AM
இரவுப் பணி முடிந்து உறங்க தாமதமானால், காலையில் விழித்தெழுவதிலும் தாமதம் ஏற்படும். இதனால், அவசரம் அவசரமாக சமையல் அறையில் பாத்திரங்களை உருட்டி, காலை, மதிய உணவுகளை தயார் செய்வோம். இனி காலையில் தாமதமாக எழுந்தாலும் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், 10 நிமிடத்தில் காலை உணவை தயாரித்து விடலாம். தேவையான பொருட்கள் குஸ் குஸ் -- ஒரு கப் நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் தண்ணீர் - ஒரு கப் கேரட் - 2 பீன்ஸ் - 2 குடை மிளகாய் - 1 பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 1 இஞ்சி - 20 கிராம் பூண்டு - 20 கிராம் மிளகாய் துாள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கடுகு - அரை டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன் கடலை பருப்பு - அரை டீஸ்பூன் கருவேப்பிலை - தேவையான அளவு செய்முறை வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதே அளவு குஸ் குஸ் எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு அடுப்பின் சூட்டை குறைக்கவும். சிறிதாக எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சேர்க்கும் போது, குஸ் குஸ் உதிரி உதிரியாக வரும். பின் குஸ் குஸ்ஸை தாளிக்கவும். கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு தலா அரை ஸ்பூன் போடுங்கள். கடுகு வெடித்தவுடன் இஞ்சி-பூண்டு தலா 20 கிராம், பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். அதனை தொடர்ந்து, நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கேரட், குடை மிளகாய் போட்டு வேக விடுங்கள். இதன் பிறகு மஞ்சள் துாள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய் துாள் ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து விடுங்கள். இறுதியாக குஸ் குஸ்சுடன் சேர்த்து, எல்லாவற்றையும் நன்கு கலந்து விடவும். இரண்டு நிமிடத்திற்கு மிதமான தீயில் கிளறிவிட்டால் குஸ் குஸ் தயார் - நமது நிருபர் -:.