உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / குழந்தைகளின் பிஸ்கெட்டில் சூப்பரான அல்வா

குழந்தைகளின் பிஸ்கெட்டில் சூப்பரான அல்வா

அல்வா என்றால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பலகாரமாகும். அல்வாவில் பல வகைகள் உள்ளன. இந்த வாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கெட் மூலம் அல்வா செய்வது குறித்து பார்க்கலாம். செய்முறை  முதலில் பிஸ்கட்டை முதலில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்  ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும் கோதுமை மாவு சேர்த்து பொன்னிறமாக கிளற வேண்டும்  5 நிமிடங்களுக்கு பின் அரைத்து வைத்துள்ள பிஸ்கட்டையும் சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்  மாவும், பிஸ்கெட்டும் நன்றாக கலந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்  கொஞ்சம் கட்டியான பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும்  சில நிமிடங்களுக்கு பின் முந்திரிப்பருப்பு, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை உடன் சேர்த்து கிளற வேண்டும்  கடாயில் அல்வா ஒட்டாத அளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும். நெய் கொஞ்சம் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டால் போதும். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பிஸ்கட் அல்வா ரெடி - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை