மேலும் செய்திகள்
சத்துகள் நிறைந்த ஓட்ஸ் உப்புமா!
25-Jul-2026
- நமது நிருபர் - காலையில் புரத சத்துள்ள சிற்றுண்டி அவசியம். முளை கட்டிய பாசிப்பருப்பு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதை தாளித்து சாப்பிட்டால் சுவையாக, ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கும். தேவையான பொருட்கள் l முளை கட்டிய பாசிப்பயறு - 1 கப் l எண்ணெய்- 2 ஸ்பூன் l வெங்காயம் - 2 l பச்சை மிளகாய் - 2 l சீரகம் - கால் ஸ்பூன் l தக்காளி - 2 l மஞ்சள் பொடி - அரை ஸ்பூன் l உப்பு - தேவையான அளவு l தண்ணீர்- 1 பெரிய ஸ்பூன் செய்முறை அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் சீரகத்தை போடவும். இது வெடித்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். மசாலா நன்றாக வதங்கியதும், முளைகட்டிய பாசிப்பருப்பை சேர்த்து, ஒரு ஸ்பூன் தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும். மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைத்தால், சுவையான, ஆரோக்கியமான சிற்றுண்டி தயார். இதில் மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையை துாவினால், சுவை அதிகமாக இருக்கும்!
25-Jul-2026