உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / ஜப்பான் ஸ்டைல் பன்னீர் கிரேவி

ஜப்பான் ஸ்டைல் பன்னீர் கிரேவி

வீடுகளில் பன்னீர் வைத்து பிரைட் ரைஸ், பிரியாணி, பட்டர் மசாலா, பாலக், ரோஸ்ட், சாண்ட்விச் என்று அடிக்கடி செய்து சாப்பிட்டு இருப்போம். ஒரே மாதிரியாக சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்று நினைத்தால், பன்னீரை வைத்து ஜப்பான் ஸ்டைலில் கிரேவி செய்யலாம். இந்த வகை கிரேவி ரெஸ்டாரன்டுகளில் அதிகம் கிடைக்கும். ஆனால் விலை கூடுதலாக இருக்கும். வீட்டிலேயே ஜப்பான் ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்  100 கிராம் பன்னீர்  ஒரு கப் பால்  ஒரு டீஸ்பூன் சர்க்கரை  இரண்டு டீஸ்பூன் சோள மாவு  இரண்டு பச்சை மிளகாய்  ஆறு பல் பூண்டு  இரண்டு டீஸ்பூன் பட்டர்  ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி பவுடர்  இரண்டு டீஸ்பூன் மிளகு பவுடர்  கொத்தமல்லி இலை சிறிதளவு  உப்பு, எண்ணெய் தேவையான அளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பன்னீரை போட்டு மிளகு பவுடர், உப்பு, சோளமாவு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து எண்ணெய் சட்டியை வைத்து, அதில் பன்னீர் கலவையை போட்டு நன்கு பொரித்து எடுக்கவும். வாணலியில் பட்டர் சேர்த்து பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி, பால் சேர்த்து நன்கு கொதித்து வற்ற வைக்கவும். முந்திரி பவுடர், சர்க்கரை, மிளகு பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். அனைத்தும் நன்றாக வெந்த பின், பொறித்த பன்னீரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். கொத்தமல்லி இலைகள் துாவி இறக்கினால், சுவையான ஜப்பான் பன்னீர் கிரேவி தயார். மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு, உணவுடன், இந்த கிரேவி வைத்துக் கொடுத்தால் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவர் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !