மேலும் செய்திகள்
குழந்தைகள் விரும்பி சுவைக்கும் 'தேங்காய் பன்'
18-Apr-2026
- நமது நிருபர் - நாவல் பழத்தில் பல விதமான புரத சத்துகள் உள்ளன. இதை உணவில் சேர்ப்பது நல்லது. இதில், காலா கட்டா பாப்சிகல்ஸ் செய்து பாருங்கள். மாறுபட்ட சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள் நாவல் பழம் - அரை கிலோ சர்க்கரை - அரை கப் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு - 1 ஸ்பூன் சீரக துாள் - 1 ஸ்பூன் சாட் மசாலா - 1 ஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை நாவல் பழங்களின் விதைகளை நீக்கி விட்டு, சதைப்பகுதியை மட்டும் மிக்சியில் போட்டு, நன்றாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில், அரைத்த நாவல் பழ கூழ், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 10 - 12 நிமிடங்கள் கொதிக்க விடவும். கலவை சற்று கெட்டியானதும் கருப்பு உப்பு, சாட் மசாலா, சீரக துாள் சேர்த்து நன்றாக கிளறி, அடுப்பை அணைக்கவும். நாவல் பழ சிரப் ஆறியதும், வடி கட்டி வைத்து கொள்ளவும். இந்த சிரப்பை ஐஸ் பாப்சிகல் மோல்டுகளில் ஊற்றி, ஐஸ்கிரீம் குச்சிகளை செருகவும். அதன் பின், ப்ரீசரில் குறைந்தபட்சம் ஆறு - எட்டு மணி நேரம் வரையோ அல்லது இரவு முழுவதும் வைத்திருந்தால், காலா கட்டா பாப்சிகல்ஸ் தயார். வெயிலுக்கு இதமாக இருக்கும். புளிப்பு, காரம், இனிப்பு கலந்து மாறுபட்ட சுவையுடன் இருக்கும். குட்டீஸ்கள் மிகவும் விரும்புவர்!
18-Apr-2026