உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  கேரளா பிளாக் அல்வா

 கேரளா பிளாக் அல்வா

- நமது நிருபர் - இந்த வாரம் கேரளாவில் பிரபலமான, 'பிளாக் அல்வா' என்று அழைக்கப்படும், தேங்காய் பால் அல்வாவை செய்யலாம். இது, கோழிக்கோடு பாணியில், உருளியில் கிளறி செய்யப்படும் புகழ்பெற்ற பேக்கரி வகை உணவாகும். தேவையான பொருட்கள் l தேங்காய் பால் - 2 கப் l அரிசி மாவு - கால் கப் l நாட்டு சர்க்கரை - ஒன்றரை கப் l முந்திரி பருப்பு - 20 l நெய் - ஒரு கப் செய்முறை l தேங்காய் பால், நாட்டு சர்க்கரை, அரிசி மாவு கரைத்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். l பின், சிறிது சிறிதாக நெய் சேர்க்க வேண்டும். l அல்வா பதம் வரும் வரை கிளறி கொண்டே முந்திரி பருப்பு, நெய் சேர்த்து கிளறி, இறக்கினால் பிளாக் அல்வா தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி