உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  சிறார்கள் விரும்பும் ஆலு -- பனீர் கட்லெட்

 சிறார்கள் விரும்பும் ஆலு -- பனீர் கட்லெட்

- நமது நிருபர் -: பள்ளி முடிந்து வீடு திரும்பும் குட்டீஸ்கள், சாப்பிட ஏதாவது தரும்படி அம்மாவை நச்சரிப்பது, வீடுகளில் அன்றாடம் நடக்கும் காட்சியாகும். தினமும் விதவிதமான சிற்றுண்டிகளை செய்து கொடுப்பது, அம்மாக்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். ஆலு - பனீர் கட்லெட் செய்து பாருங்கள். தேவையான பொருட்கள் l உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது) l பனீர் - 100 கிராம் l பச்சை மிளகாய் - 1 l இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் l கரம் மசாலா - அரை ஸ்பூன் l சாட் மசாலா - அரை ஸ்பூன் l கொத்துமல்லி - ஒரு கைப்பிடி l பிரட் துாள் - மூன்று ஸ்பூன் l உப்பு - தேவையான அளவு l எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு செய்முறை முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில், வேக வைத்த உருளைக்கிழங்குகளை போட்டு, நன்றாக மசிக்கவும். இதில் பனீரை துருவி சேர்க்கவும். அதன்பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, சாட் மசாலா, நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இந்த கலவையில் சிறிதளவு பிரட் துாள் சேர்த்து பிசையவும். அதன்பின் கையில் எண்ணெய் தடவி, இதை சிறு, சிறு உருண்டைகளாக்கி கட்லெட் வடிவம் கொடுக்கவும். இதை பிரட் துாளில் பிரட்டவும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் கட்லெட்களை போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்தால், சுவையான ஆலு, பனீர் கட்லெட் தயார். கட்லெட்கள் சிறிது நேரம் டிஷ்யூ பேப்பரில் வைத்திருந்தால், எண்ணெயை உறிஞ்சிவிடும். தொட்டுக்கொள்ள கிரீன் சட்னி அல்லது தக்காளி சாஸ் பொருத்தமாக இருக்கும். எண்ணெய் அதிகம் இருக்க வேண்டாம் என, நினைப்பவர்கள் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கட்லெட்டுகளை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி , இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி