மேலும் செய்திகள்
சுவையான மாம்பழ ஜாமூன்
20-Jun-2026
- நமது நிருபர் -மாம்பழ சீசனில் ஒரு முறையாவது செய்து பார்க்க வேண்டிய ரெசிபி தான் மாம்பழ சர்பத். வீட்டில் அதிக மாம்பழங்கள் இருந்தாலோ, மாம்பழங்கள் வீணாகும் நிலையில் இருந்தாலோ மாம்பழ சர்பத் செய்யலாம். இதை செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது. அதிக பொருட்களும் தேவைப்படாது. அதே சமயம் சுவை பிரமாதமாக இருக்கும். தேவையான பொருட்கள் l மாம்பழம் - தேவையான அளவு l சர்க்கரை - 3 டீஸ்பூன் l எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் l நன்னாரி சிரப் - 2 டீஸ்பூன் l ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு செய்முறை முதலில் நல்ல இனிப்பு சுவையுடைய, பெரிய அளவிலான மாம்பழத்தின் தோலை நீக்கி கொள்ளவும். மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். வெட்டிய துண்டுகளை மிக்சியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, கூழாக அரைத்து கொள்ளவும். இதனுடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து, மீண்டும் லேசாக அரைத்து கொள்ளவும். இதற்கிடையே, ஒரு கண்ணாடி டம்ளரில் இரண்டு டீ ஸ்பூன் நன்னாரி சிரப், ஐஸ் கட்டிகள் போட்டு கொள்ளவும். இதில், தயாரித்து வைத்த மாம்பழ கூழை ஊற்றவும். ஸ்பூனால் நன்கு கிளற வேண்டும். அவ்வளவு தான், மாம்பழ சர்பத் தயார். தேவைப்பட்டால் சியா விதைகளை போடலாம்!
20-Jun-2026