மேலும் செய்திகள்
காளான் ஒயிட் பிரியாணி
13-Jun-2026
- நமது நிருபர் - இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின், பால்பா மாவட்டத்தில், உலக புகழ்பெற்ற சுக்கவுனி என்ற சுவையான 'டிஷ்' தயாரிக்கப்படுகிறது. இந்த டிஷ்ஷை, வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் l வேக வைத்த உருளை கிழங்கு - இரண்டு l கெட்டியான தயிர் - அரை லிட்டர் l வெங்காயம் - ஒன்று l பச்சை மிளகாய் - இரண்டு l சீரக துாள் - ஒரு டீஸ்பூன் l காஷ்மீரி மிளகாய் துாள் - ஒரு டீஸ்பூன் l கருப்பு உப்பு - ஒரு டீஸ்பூன் l சாதாரண உப்பு - கால் டீஸ்பூன் l கொத்தமல்லி தழை - சிறிதளவு l கடுகு, சீரகம் - ஒரு டீஸ்பூன் l கசூரி மேத்தி - சிறிதளவு l மஞ்சள் துாள் - கால் டீஸ்பூன் l மிளகாய் துாள் - கால் டீஸ்பூன் செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில் தயிரை ஊற்றி, கட்டியில்லாமல் நன்கு அடித்து கொள்ளவும். இதனுடன் தோல் சீவி, வேக வைத்த இரண்டு உருளை கிழங்கை துண்டு, துண்டாக நறுக்கி சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரக துாள், காஷ்மீரி மிளகாய் துாள், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்கவும். சிறிய தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின் அடுப்பை ஆன் செய்து, கடாய் வைத்து சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்து முடித்ததும் கசூரி மேத்தி, மஞ்சள், மிளகாய் துாள்களை சேர்த்து லேசாக கிளறவும். இந்த சூடான தாளிப்பை ஏற்கனவே தயார் செய்துள்ள, உருளை கிழங்கு - தயிர் கலவையில் ஊற்றி, நன்கு கிளறினால் சுவையான நேபாளி சுக்கவுனி தயார். இதை உடனடியாகவும் சாப்பிடலாம். சற்று நேரம், பிரிட்ஜில் வைத்தும், 'ஜில்'லென்றும் சாப்பிடலாம்!
13-Jun-2026