உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  சத்துகள் நிறைந்த ஓட்ஸ் உப்புமா!

 சத்துகள் நிறைந்த ஓட்ஸ் உப்புமா!

- நமது நிருபர் - காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்வதற்கு பதிலாக ஒரு முறை 'ஓட்ஸ் உப்புமா' செய்து பாருங்கள். எளிதில் செய்யலாம், சுவையும் அருமையாக இருக்கும். அதிக சத்து நிறைந்த காலை உணவாக இருக்கும். தேவையான பொருட்கள் l ஓட்ஸ் 1 கப் l எண்ணெய் 2 டீஸ்பூன் l கடுகு, உளுந்தம்பருப்பு 1 டீஸ்பூன் l பெரிய வெங்காயம் 1 l பச்சை மிளகாய் 4 l கேரட், பீன்ஸ் அரை கப் l தண்ணீர் தேவையான அளவு l உப்பு தேவையான அளவு செய்முறை வாணலியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு லேசாக தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன், ஓட்ஸ் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். சில நிமிடங்களில் தண்ணீர் வற்றி ஓட்ஸ் வெந்துவிடும். இப்போது, அடுப்பிலிருந்து வாணலியை இறக்க வேண்டும். அவ்வளவு தான் சத்தான ஓட்ஸ் உப்புமா தயார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை