ஊட்டச்சத்தை அள்ளி வழங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி
- நமது நிருபர் - சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஊட்டச்சத்துகள் ஏராளம். இதை கிழங்காக சாப்பிடுவதற்கு பதில், சிற்றுண்டிகள் செய்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி எப்படி செய்வது பார்க்கலாமா... தேவையான பொருட்கள் l சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 3 l கோதுமை மாவு - 2 கப் l உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை, நன்றாக கழுவி வேக வைக்கவும். அதன்பின், இதன் தோலை உறித்து, பாத்திரத்தில் போட்டு கட்டிகள் இல்லாமல் மசிக்கவும். இதில் கோதுமை மாவு, உப்பு போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். கிழங்கிலேயே ஈரத்தன்மை இருப்பதால், தண்ணீர் தேவைப்படாது. மாவை நன்றாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் வட்டமாக தட்டவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, சூடானதும் சப்பாத்தியை போடவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான சப்பாத்தி தயார். தேங்காய் சட்னி, குருமா அல்லது தயிர் பச்சடியை தொட்டு கொண்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, அனைவரும் விரும்பி சாப்பிடுவர். காலை டிபனுக்கு மட்டுமின்றி, மதிய உணவுக்கும் கொடுத்து அனுப்பலாம்!