உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / உணவுக்கு சுவை சேர்க்கும் வெங்காய ஊறுகாய்

உணவுக்கு சுவை சேர்க்கும் வெங்காய ஊறுகாய்

உணவின் சுவையை அதிகரிப்பது ஊறுகாய். சோற்றுக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, அடை, உப்புமா என, அனைத்துக்கும் ஊறுகாய் சூப்பர் காம்பினேஷன். மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், காய்கறி ஊறுகாய் என, ஊறுகாய்களில் பல ரகங்கள் உள்ளன. வெங்காய ஊறுகாய் சுவைத்துள்ளீர்களா? மாறுபட்ட சுவையுடன் இருக்கும். செய்முறை வெங்காயம், பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கவும். பூண்டுகளை தோலுரித்து வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து, 1 கப் எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை, வதக்க வேண்டும். அதன்பின் இந்த கலவையில் மிளகாய் துாள், உப்பு, புளி ரசம், வெல்லம், வேப்பிலை இலை ஆகியவற்றை போடவும். மிச்சமுள்ள ஒரு கப் எண்ணெயை சூடாக்கி, வெங்காய கலவை மீது ஊற்றி சில நிமிடங்கள் கை விடாமல் கிளறி இறக்கினால், சுவையான வெங்காய ஊறுகாய் தயார். காற்று புகாத பாட்டிலில் போட்டு வைக்கலாம். நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை