உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  கர்ப்பிணியர் சாப்பிட வேண்டிய கருப்பு உளுந்து ராகி அல்வா

 கர்ப்பிணியர் சாப்பிட வேண்டிய கருப்பு உளுந்து ராகி அல்வா

- நமது நிருபர் -: கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் அளிக்கும் தருணம். கர்ப்ப காலத்தில், பெண்கள் எச்சரிக்கையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். இதற்கு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். அத்தகைய உணவுகளில் ஒன்றான கருப்பு உளுந்து ராகி அல்வாவை இன்று செய்து பார்க்கலாம். தேவையான பொருட்கள் l கருப்பு உளுந்து - ஒரு கப் l கேழ்வரகு மாவு - ஒரு கப் l வெள்ளை எள் - அரை கப் l உப்பு - ஒரு சிட்டிகை l நாட்டு சர்க்கரை - ஒரு கப் l நல்லெண்ணெய் - சிறிதளவு l நெய் - 100 கிராம் l முந்திரி - 10 செய்முறை l ஒரு வாணலியில் ஒரு கப் அளவுக்கு கருப்பு உளுந்தை எடுத்து, மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின், அதே வாணலியில் சிறிதளவு வெள்ளை எள் சேர்த்து வறுக்கவும். l வறுத்து வைத்துள்ள கருப்பு உளுந்து, வெள்ளை எள்ளுடன் இரண்டு ஏலக்காய் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். l பின், அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றியதும், ஒரு கப் அளவுக்கு கேள்வரகு மாவு, ஒரு சிட்டிகை உப்பு, தண்ணீர் ஊற்றி, கட்டி இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும். மிகவும் கெட்டியாக இல்லாமலும், தண்ணீர் போன்று இல்லாமலும் பார்த்து கொள்ள வேண்டும். l இவைகளுடன் ஒரு கப் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி, 10 நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும். சிறிதளவு நெய் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். ஐந்து நிமிடங்களுக்கு பின், சிறியளவு நல்லெண்ணெய் ஊற்றி, வாணலியில் ஒட்டாத அளவு கிளறவும். l நிறைவில் நெய்யில் முந்திரியை பொரித்து, அல்வாவுடன் சேர்த்தால் போதும். சுவையான மற்றும் ஊட்டச்சத்துள்ள கருப்பு உளுந்து ராகி அல்வா தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை