உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / சாதத்திற்கு ஏற்ற சூப்பர் காம்பினேஷன் காலிபிளவர்: - உருளைக்கிழங்கு வறுவல்

சாதத்திற்கு ஏற்ற சூப்பர் காம்பினேஷன் காலிபிளவர்: - உருளைக்கிழங்கு வறுவல்

- நமது நிருபர் - சப்பாத்தி, பூரி, சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு ஏற்ற சூப்பரான காம்பிஷேனாக, காலிபிளவர் உருளைக்கிழங்கு வறுவல் உள்ளது. இதை செய்ய, 15 நிமிடங்கள் தான் ஆகும்.

தேவையான பொருட்கள்

l காலி பிளவர் - 1 l உருளைக்கிழங்கு - பெரியது 2 l பெரிய வெங்காயம் l தக்காளி - 1 l கடுகு - அரை டீஸ்பூன் l சீரகம் - ஒரு டீஸ்பூன் l கறிவேப்பிலை - ஒரு கொத்து l இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் l மஞ்சள் துாள் - அரை டீஸ்பூன் l மிளகாய் துாள் - ஒன்றரை டீஸ்பூன் l மல்லி துாள் - ஒரு டீஸ்பூன் l கரம் மசாலா - அரை டீஸ்பூன் l பெருங்காய பவுடர் - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி இலை சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் காலி பிளவரை நறுக்கி போட்டு, அதனுடன் மிதமான சூட்டில் உள்ள வெந்நீர், மஞ்சள் துாள், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின், தண்ணீரை முழுமையாக வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். அடுப்பை ஆன் செய்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின், தக்காளி சேர்த்து, அது நன்கு குழைந்து, தொக்கு பதத்திற்கு வரும் வரை வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள், மிளகாய், மல்லி துாள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இப்போது நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, காலி பிளவரை வாணலியில் சேர்க்கவும். மசாலாக்கள் காய்கறிகளில் நன்றாக ஒட்டும்படி மிதமாக தீயில் 2 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும். மசாலா கருகாமல் இருக்க, சிறிதளவு தண்ணீரை தெளித்து விட்டு, வாணலியை மூடி போட்டு, மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். உருளைக்கிழங்கு, காலிபிளவர் நன்கு வெந்ததும், மூடியை திறந்து விடவும். இப்போது கரம் மசாலாவை துாவி, அடுப்பை சிம்மில் வைத்து, காய் மொறுமொறுப்பாக மாறும் வரை அடிப்புறமிருந்து மெதுவாக கிளறவும். நல்ல சிவப்பு நிறமாக வறுபட்டதும், நறுக்கிய கொத்தமல்லி இலையை துாவி அடுப்பை அணைக்கவும். அவ்வளவு தான் சுவையான, வாசனையுடன் கூடிய காலிபிளவர் உருளைக்கிழங்கு வறுவல் தயார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை