உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / 10 நிமிடங்களில் சிப்பி காளான் வறுவல்

10 நிமிடங்களில் சிப்பி காளான் வறுவல்

பட்டன் காளான், மொட்ட காளான் போன்றே சிப்பி காளானும் பிரபலமாகி வருகிறது. காளானில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி உணவு முறையில் சேர்த்து கொள்ளலாம். செய்முறை  முதலில் பாக்கெட்டுகளில் உள்ள சிப்பி காளான்களை அலசி, தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.  கடுகு, கறிவேப்பிலை நன்கு பொரிந்ததும், இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.  நன்கு வதங்கியதும் காளான், கரம் மசாலா துாள், மிளகாய் துாள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.  காளான் நன்கு வேக வேண்டும் என தண்ணீர் சேர்க்க வேண்டாம். காளானில் தண்ணீர் அதிகளவில் இருக்கும் என்பதால் அதுவே போதும்.  காளான் நன்கு சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்தால் போதும். சுவையான, ஆரோக்கியம் நிறைந்த சிப்பி காளான் வறுவல் ரெடி. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை