உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / சுவையூட்டும் பிரட் பரோட்டா

சுவையூட்டும் பிரட் பரோட்டா

பொதுவாக கோதுமை அல்லது மைதா மாவு பயன்படுத்தி பரோட்டா செய்வது வழக்கம். மிச்சமான பிரட் துண்டுகளை வைத்தும் சூப்பரான பரோட்டா செய்யலாம். எப்படி செய்வது என, பார்க்கலாம். தேவையான பொருட்கள் பிரட் ஸ்லைஸ் - 5, ரவை - அரை கப், தயிர் - அரை கப் தண்ணீர் - 1 கப், அரிசி மாவு - 1 ஸ்பூன், மஞ்சள் துாள் - கால் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு, துருவிய கேரட் - அரை கப் குடமிளகாய் - அரை, பீன்ஸ் - நான்கு, ஸ்வீட் கார் - 2 ஸ்பூன் தக்காளி - அரை, கொத்துமல்லி - ஒரு கைப்பிடி எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை முதலில் பிரட்களை சிறு, சிறு துண்டுகளாக்கி கிண்ணத்தில் போடவும். அதில், ரவை, தயிர், தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். சிறிது நேரம் ஊற விடவும். இதை மிக்சியில் போட்டு பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அரிசி மாவை சேர்க்கவும். அதன்பின் மஞ்சள் துாள், உப்பு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பீன்ஸ், ஸ்வீட் கார்ன், தக்காளி, பச்சை மிளகாய், கொத்துமல்லியை சேர்த்து தோசை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைக்கவும். சூடானதும் தோசை போன்று ஊற்றவும். அதை சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் வேக விடவும். அதன்பின் திருப்பி போட்டு லேசாக அழுத்தவும். நன்றாக வெந்த பின் சூடாக பரிமாறவும். தொட்டுக்கொள்ள கிரீன் சட்னி அல்லது தக்காளி சாஸ் பொருத்தமாக இருக்கும். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை