| ADDED : டிச 06, 2025 05:26 AM
- நமது நிருபர் - பொதுவாக வீட்டில் இட்லி மீதமாகி விட்டால், இட்லியை உதிர்ந்து இல்லத்தரசிகள் உப்புமா செய்து கொடுப்பர். ஒரு காலத்தில் இட்லி உப்புமாவுக்கு அதிக மவுசு இருந்தது. இந்த கால குழந்தைகள், இட்லி உப்புமா என்றாலே ஓடி விடுகின்றனர். எப்போதும் போல இட்லி உப்புமா செய்யாமல், சற்று மாறுதலாக தாளித்த தயிர் இட்லி செய்தால், வித்தியாசமான 'டிஷ்' ஆக உள்ளதே என்று குழந்தைகள் விரு ம்பி சாப்பிடுவர். தேவையான பொருட்கள் l ஐந்து இட்லி l இரண்டு கப் தயிர் l ஒரு குடை மிளகாய் l ஒரு பெரிய வெங்காயம் l ஒரு டீஸ்பூன் நெய் l ஒரு டீஸ்பூன் நறுக்கிய பூண்டு l ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் பவுடர் l கால் டீஸ்பூன் வெள்ளை எள் l உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை தேவையான அளவு செய்முறை அடுப்பை ஆன் செய்து, அதில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். இட்லிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சிறிய பாத்திரத்தில் தயிர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். வாணலியில் நெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, வெங்காயம், குடை மிளகாய், வெள்ளை எள், காஷ்மீரி மிளகாய் பவுடர், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அவ்வப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தயிர் ஊற்றி நன்கு கலந்து விடவும். பின், தயிர் கலவையை பொரித்து வைத்து உள்ள இட்லியில் சேர்த்தால் சுவையான தாளித்த தயிர் இட்லி தயார். மிகவும் ஈசியாக செய்ய கூடிய டிஸ் ஆக உள்ளது. வெறும், 15 நிமிடங்களில் செய்து முடிக்கலாம். மாலையில் பள்ளி சென்று வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.