மேலும் செய்திகள்
காரமான மிளகு காளான் வறுவல்
25-Oct-2025
குட்டீஸ்கள் விரும்பும் கோவக்காய் மசாலா வறுவல்
11-Oct-2025
அரிசி மோசடி சங்கிலி — அரசின் கண்காணிப்பு எங்கே?
27-Oct-2025
இட்லி, தோசைக்கு தொட்டுக்க பல விதமான சட்னி, சாம்பார் இருந்தாலும், வெங்காய சட்னியை தொட்டு சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும். அதுவும் சின்ன வெங்காயத்தை வதக்காமல் அப்படியே பச்சையாக சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவையில் பத்து இட்லி கூட தாராளமாக சாப்பிடலாம். இதை செய்வதற்கும் நேரம் ஆகாது. காலை வேளையில் குறுகிய நேரத்தில் செய்து முடிக்கலாம். செய்முறை மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும். பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பின் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேரத்து தாளித்து கொள்ளவும். இதில், அரைத்து வைத்த சட்னியை ஊற்றி லேசாக கிளற வேண்டும். அவ்வளவு தான்... சுவையான சின்ன வெங்காய சட்னி தயார். இதை முட்டை தோசையுடன் தொட்டு சாப்பிடும் போது, அதன் சுவையில் நாக்கு நாட்டியமாடும். - நமது நிருபர் -
25-Oct-2025
11-Oct-2025
27-Oct-2025