இனிப்பு வெள்ளரிக்காய் இட்லி
- நமது நிருபர் - வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பலருக்கும் மிகவும் பிடிக்கும். இதில், சுவையான இட்லியும் செய்யலாம். தேவையான பொருட்கள் * வெள்ளரிக்காய் -1 * அரிசி - கப் * வெல்லம் - கால் கப் * தேங்காய் துருவல் - அரை கப் * உப்பு - கால் ஸ்பூன் * நெய் - தட்டில் தடவ தேவையான அளவு செய்முறை முதலில் அரிசியை கழுவி, மூன்று மணி நேரம் ஊற விடவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கி, துருவி கொள்ளவும். இதன் சாற்றை பிழிந்து பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். ஊற வைத்த அரிசியை, நீரில் இருந்து பிழிந்து, மிக்சியில் போடவும். இத்துடன் வெல்லம், தேங்காய் துருவல், தண்ணீருக்கு பதிலாக வெள்ளரிக்காய் சாறு சேர்த்து, இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால், வெள்ளரிக்காய் சாற்றையே சேர்க்கவும். இந்த மாவில் துருவிய வெள்ளரிக்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இட்லி தட்டில் நெய் தடவி, அதில் மாவை ஊற்றி ஸ்டீமரில் வைத்து, 25 நிமிடம் வேக வைத்தால், இனிப்பு வெள்ளரிக்காய் இட்லி தயார். இதனை நெய், தேங்காய் சட்னி அல்லது தேன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. விருப்பம் இருந்தால், மாவில் கொத்துமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.