மேலும் செய்திகள்
மாறுபட்ட சுவையுடன் பீட்ரூட் முறுக்கு!
31-Oct-2026
- நமது நிருபர் - பலாப்பழத்தில் பல சத்துகள் உள்ளன. இதில் அல்வா, பாயாசம், சிப்ஸ் உட்பட, பல விதமான தின்பண்டங்கள் செய்யலாம். எளிதாக பலாப்பழ சொய்யமும் செய்யலாம். தேவையான பொருட்கள்
பழுத்த பலாப்பழ சுளைகள் - 2 கப் அரிசி - 1 கப் தேங்காய் துறுவல் - அரை கப் வெல்லம் - அரை கப் ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை நெய் அல்லது எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின் பலாச்சுளைகள், ஊற வைத்த அரிசி, வெல்லம், தேங்காய் துறுவல், ஏலக்காய் துாளை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். தேவைப்பட்டால் மட்டுமே நீர் சேர்க்க வேண்டும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். காய்ந்ததும் பலாப்பழ கலவையை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, வாணலியில் போடவும். மிதமான தீயில் இரண்டு பக்கமும், பொன்னிறமாக வெந்தால் சுவையான பலாப்பழ சொய்யம் தயார். சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது மலை கிராமங்களின், பாரம்பரிய தின்பண்டமாகும்.
31-Oct-2026