மேலும் செய்திகள்
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
04-Apr-2026
- நமது நிருபர் -: ஆந்திரா, தெலுங்கானாவில், சர்வ பிண்டி என்ற அரிசி மாவு அப்பம் மிகவும் பிரபலம். எளிதில் செய்யக்கூடிய சர்வ பிண்டியை, காலை, மாலை நேரங்களில் தின்பண்டங்களாக ருசிக்கலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தேவையான பொருட்கள் l அரிசி மாவு - 6 கப் l கடலை பருப்பு -- 12 ஸ்பூன் l வெள்ளை எள் -- 12 ஸ்பூ ன் l சீரகம் -- 2 டீஸ்பூன் l இஞ்சி -- 50 கிராம் l பூண்டு -- 50 கிராம் l பச்சை மிளகாய் -- 20 l வெங்காயம் -- 6 பெரிய வெங்காயம் l மஞ்சள் துாள் -- ஒரு ஸ்பூன் l மிளகாய் துாள் -- 2 ஸ்பூன் l உப்பு -- 2 ஸ்பூன் l நல்லெண்ணெய் -- வறுப்பதற்கு l தண்ணீர் -- தேவையான அளவு l கறிவேப்பிலை -- ஒரு கைப்பிடி l கொத்தமல்லி -- ஒரு கைப்பிடி செய்முறை l அம்மிக்கல்லில், 50 கிராம் பூண்டு, 50 கிராம் இஞ்சி, இரண்டு டீஸ்பூன் சீரகம் போட்டு அரைக்கவும். இதை வெளியே எடுத்த பின், 20 பச்சை மிளகாயை இடிக்கவும். l சர்வ பிண்டி செய்முறையில் அளவீடுகள் மிக முக்கியம். ஆறு கப் அரிசி மாவிற்கு, 12 ஸ்பூன் கடலை பருப்பு, 12 ஸ்பூன் வெள்ளை எள் என்பது கணக்கு. l கடலை பருப்பை தண்ணீரில் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து, 12 ஸ்பூன் வெள்ளை எள்ளை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும் l இப்போது பெரிய பாத்திரத்தில் ஆறு கப் அரிசி மாவு போட்டு அதனுடன் ஊறவைத்த கடலை பருப்பு, அரைத்த வெள்ளை எள், ஆறு பெரிய வெங்காயம், அம்மியில் இடித்த பச்சை மிளகாய், -சீரகம், இஞ்சி - பூண்டு கலவை சேர்த்து மிக்ஸ் செய்யவும். l அடுத்ததாக இரண்டு ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் மிளகாய் துாள், ஒரு ஸ்பூன் மஞ்சள் துாள் சேர்க்கவும். தலா ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போடுங்கள். l கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கடைகளில் போண்டா மாவு தயார் செய்வது போல் சர்வ பிண்டி மாவு தயாரிக்கவும். l கடாயில் எண்ணெய் தடவி இரண்டு நெல்லிக்காய் சைஸில், மாவு எடுத்து வடை தட்டுவது போல் தட்டி வைத்து ஆங்காங்கே ஓட்டை போட்டு மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்களுக்கு வேக வறுக்கவும். l அதன்பிறகு மறுபுறம் திருப்பி இரண்டு நிமிடங்களுக்கு வேக விடுங்கள். சர்வ பிண்டி ஸ்நாக் ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம்.
04-Apr-2026