மேலும் செய்திகள்
குட்டீஸ்களுக்கு பிடித்த ரசமலாய்
18 hour(s) ago
- நமது நிருபர் -: 'பிரட் படூரா' என்பது, எளிமையாகவும், குறுகிய நேரத்திலும் தயாரிக்கும் சிற்றுண்டியாகும். பணிச்சுமையால் சமையல் செய்ய நேரம் இல்லை என்றால், பிரட் படூரா செய்யலாம். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள்: பிரட் - 4 ஸ்லைஸ்கள் மைதா - அரை கிலோ தயிர் - 2 கப் பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை சர்க்கரை - ஒரு ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை முதலில் மைதா மாவை சலித்து பாத்திரத்தில் போட்டு பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து பிசையவும். பிரட் ஸ்லைஸ்களை தண்ணீரில் நனைத்து, பிழிந்து மைதாவுடன் சேர்க்கவும். அதன்பின் தயிர், சர்க்கரை போடவும். இதில், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக பிசையவும். சப்பாத்தி பதத்தில் மென்மையாக இருக்க வேண்டும். மாவை ஈரத்துணியால் மூடி, 15 முதல் 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். அதன்பின், மாவை உருண்டை க ளாக்கி, சற்றே தடிமனாக வட்ட வடிவத்தில் தேய்க்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவு ம். காய்ந்ததும் தேய்த்து வைத்த மாவை போட்டு, பொன்னிறமாக பொரித்தால், சுவையான பிரட் பட்டூரா தயார். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். செய்வதும் எளிது. தொட்டுக்கொள்ள வெங்காய பச்சடி அல்லது தக்காளி சாஸ் பொருத்தமாக இருக்கும்.
18 hour(s) ago