உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  தித்திக்கும் பாஸ்தா கீர்!

 தித்திக்கும் பாஸ்தா கீர்!

- நமது நிருபர் - பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் முஸ்லிம்களின் வீடுகளில் பாஸ்தா கீர் கண்டிப்பாக இருக்கும். நாவை நடமாட வைக்கும் சுவையில் நமது வீட்டிலும் எப்படி செய்வது என பார்ப்போம். தேவையான பொருட்கள் ஒன்றரை கப் பாஸ்தா நெய் தேவையான அளவு கால் கப் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி 1 லிட்டர் காய்ச்சிய பால் ஒரு கப் சர்க்கரை ஒரு டீஸ்பூன் ஏலக்காய் துாள் செய்முறை அடுப்பை ஆன் செய்து கடாய் வைத்து நெய் ஊற்றவும். நெய் சூடானதும் அதில் பாஸ்தாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். பாதாம், பிஸ்தா, முந்திரியையும் நெய்யுடன் சேர்த்து வறுக்க வேண்டும். பின், அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, காய்ச்சிய பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பால் கொதி வரும் போது வறுத்து வைத்திருக்கும் பாஸ்தா, பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்த்து, 20 நிமிடங்கள் வரை வேக விடவும். பாஸ்தா நன்கு வெந்து வந்தவும், ஏலக்காய் துாள் சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பாஸ்தா கீர் தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பி சாப்பிடுவர். இனிப்பு மற்றும் கொழுப்பு சத்துகள் அதிகம் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், சர்க்கரை நோயாளிகள் அளவோடு உட்கொள்வது நல்லது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை