மேலும் செய்திகள்
நொறுக்குகள்
26-Sep-2026
- நமது நிருபர் - l வெங்காய தயிர் பச்சடி செய்யும் போது, நறுக்கிய வெங்காயத்தில் சிறிதளவு உப்பு சேர்த்தால், பச்சடி கூடுதல் சுவையாக இருக்கும் l உருளைகிழங்கு காரிக்கறியில் அரை கரண்டி புளிப்பு இல்லாத, கெட்டி தயிர் சேர்த்து வதக்கினால் கூடுதல் சுவையாக இருக்கும் l சூடான பாலில் எலுமிச்சை சாறு சேர்ப்பதற்குப் பதில், சற்றே ஆறிய பாலில் தயிர் கலந்து, பன்னீர் தயாரித்தால் மென்மையாக இருக்கும் l பருப்பு பாயசம் செய்யும் போது, சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்து செய்தால், கூடுதல் சுவை கிடைக்கும் l துவையல் அரைக்கும் போது, புளிக்குப் பதிலாக, மாங்காய் துருவல் அல்லது தக்காளி சேர்த்தால் சுவை துாக்கலாக இருக்கும் l சுண்டல் செய்த பின், அதன் மீது சிறிதளவு காரப்பூந்தி துாவி பரிமாறினால் மொமொறுப்பான சுவையுடன் இருக்கும் l சப்பாத்திக்கு கையால் மாவு பிசைவதற்கு முன், சூடான நெய் விட்டு பிசிறிய பிறகு சூடான பால் விட்டால் எளிதாக பிசையலாம். l கோவக்காய் பொரியல் செய்யும் போது, சிறிதளவு மிளகு துாள் சேர்த்தால் சுவை கூடும். l ஜவ்வரிசியை ஊற வைத்து இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தயிர், கறிவேப்பிலை சேர்த்து வடை செய்தால் ருசியாக இருக்கும். l கீரை கூட்டு செய்யும் போது, பூண்டு மற்றும் சோம்பை லேசாக இடித்து சேர்த்துக் கொண்டால், கீரை கூட்டு வாசமாக இருக்கும்
26-Sep-2026