உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  உடலுக்கு வலுவூட்டும் மோர் களி

 உடலுக்கு வலுவூட்டும் மோர் களி

- நமது நிருபர் -: தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் மோர் களியும் ஒன்று. மோர் மிளகாய், தயிர், அரிசி மாவு கொண்டு செய்யக்கூடியது. ஏறக்குறைய உப்புமா செய்வது போன்று இருக்கும். உப்புமாவில் ரவை பயன்படுத்துவோம்; இதில், அரிசி மாவும், தயிரும் பயன்படுத்த வேண்டும். தேவையான பொருட்கள் * அரிசி மாவு - 200 கிராம் * தயிர் - 200 மில்லி * மோர் மிளகாய் - 10 * கறிவேப்பிலை - சிறிதளவு * நெய் - 3 ஸ்பூன் * நல்லெண்ணெய் - 50 மில்லி * கடுகு - ஒரு டீஸ்பூன் * உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன் * பெருங்காயம் - ஒரு ஸ்பூன் * உப்பு - தேவையான அளவு செய்முறை  வாணலியில் 200 கிராம் அரிசி மாவு, 200 மில்லி தயிர், அரிசி மாவு அளந்த கப் அளவில் இரண்டரை மடங்கு தண்ணீர் ஊற்றி, மூன்றையும் நன்றாக கலக்கவும்  பெரிய வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பத்து மோர் மிளகாயை பாதியாக உடைத்து போட்டு வறுக்கவும்  அடுத்து ஒரு டீஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் உளுந்தம் பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் பெருங்காயம் போட்டு வறுக்கவும்  பின் அரிசி மாவு, தயிர், தண்ணீர் கலவையை ஊற்றி கிண்ட ஆரம்பிக்கவும். மிதமான சூட்டில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிண்டி கொண்டே இருக்க வேண்டும்  ஆரம்பத்திலேயே சொன்னது போல இது உப்புமா செய்முறை தான். தண்ணீர் வற்றி மோர் களி தயாராகும்  களி ஓரளவு கெட்டியானதும் தேவையான அளவு உப்பு சேருங்கள். இப்போது மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கிண்டுவதை தொடருங்கள்  மோர் களி கெட்டியான பிறகு அடுப்பை ஆப் செய்து, ஒரு சதுர வடிவிலான பாத்திரத்திற்கு மாற்றி, அரைமணி நேரம் ஆறவிடவும்  சிலர் அப்படியே சாப்பிட விரும்புவர். ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம்  ஆறவிட்ட மோர் களி, கேக் போல மாறிவிடும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்  பேனில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் ரோஸ்ட் செய்வது போல மோர் களி துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை