உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / சைக்கிளிங் மூலம் நிதி திரட்டி ஏழைகளுக்கு உதவும் நியூரோ சர்ஜன்

சைக்கிளிங் மூலம் நிதி திரட்டி ஏழைகளுக்கு உதவும் நியூரோ சர்ஜன்

டாக்டர் என்றால் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் மாட்டிக் கொண்டு சுற்றுபவரை பார்த்திருப்பீர்கள். ஆனால், பெங்களூரை சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், தனக்கு பிடித்தமான சைக்கிளிங் மூலம் போட்டிகளில் பங்கேற்று, அதில் கிடைக்கும் பரிசு தொகையை, ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்காக செலவழித்து வருகிறார். பெங்களூரை சேர்ந்தவர் டாக்டர் அரவிந்த் படேஜா, 56. சீதா படேஜா மருத்துவமனையில், நியூரோ சர்ஜன் எனும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். டாக்டராக இருந்து கொண்டு, சைக்கிளிங் மூலம் நன்கொடை வசூலித்து, ஏழைகளுக்கு இலவசமாகவும், குறைந்த தொகையிலும் அறுவை சிகிச்சை செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது: எங்கள் மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகள், பணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். காத்திருப்பு அப்போது சிலருக்கு குறைந்த கட்டணத்திலும், சிலருக்கு இலவசமாகவும் அறுவை சிகிச்சை செய்தோம். ஆனால், அறுவை சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உட்பட மற்ற செலவுகளுக்கு பணம் தேவைப்படுகிறது. இங்கு கட்டணம் செலுத்த முடியாதவர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு செல்வர். ஆனால், அங்கு சிகிச்சைக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே அத்தகைய நோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. எனக்கு சிறு வயது முதலே சைக்கிள் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். கடந்த 2009 ம் ஆண்டு டி.எப்.என்., எனும் டூர் ஆப் நீல்கிரீசுடன் எங்கள் மருத்துவமனையும் இணைந்து சைக்கிளிங் போட்டி நடத்தி வருகிறோம். இலவசம் அந்தாண்டு கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை 800 கி.மீ., கடந்து சென்றேன். மேற்கு தொடர்ச்சி மலையின் வழியாக செல்லும் போது, விலங்குகளை பார்க்க நேர்ந்தது. இதில் முதல் பரிசும் பெற்றேன். அப்போது தான், 2013ல் கவுதம் ராஜா என்ற சைக்கிளிங் குழுவை சேர்ந்தவர், என்னை அணுகி, தானும் 'சீதா படேஜா' மருத்துவமனையின் 'ரைடராக' விரும்புவதாக தெரிவித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு நிதி திரட்ட இருவரும் முடிவு செய்தோம். இதன் மூலம் கிடைத்த பணத்தில், ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓரளவு பணம் செலுத்த வசதி உள்ளவர்களிடம் குறைந்த தொகை பெறப்படும். மீதிப்பணத்தை மருத்துவமனையே ஏற்கும். ஆனால், அனைவருக்கும் ஒரே தரத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம். கடந்த 2009 ல் காதலர் தினத்தன்று சைக்கிள் வாங்கினேன். வாரத்திற்கு எட்டு முதல் 10 மணி நேரம் சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவேன். தினமும் இரண்டு மணி நேரம் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபடுவேன். மருத்துவமனைக்கு சைக்கிளில் தான் செல்வேன். வார இறுதி நாட்களில் நந்தி மலை வரை சென்று வருவேன். சில நாள் ஓல்டு மெட்ராஸ் சாலை, நெலமங்களா டவுன் வரை சென்று வருவேன். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !