மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025
''மனதை எப்போதும் 'பாசிட்டிவ்' ஆக வைத்துக் கொண்டால், அழகு தானாகவே வந்து விடும்,'' என்று, ரசிகர்களுக்கு அசத்தலான செய்தி சொன்னார் நடிகை கீர்த்தி ஷெட்டி.2021ல் தெலுங்கில், 'உப்பென்னா' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம். வரிசையாக, 'ஷ்யாம் சிங்கா ராய்', 'தி வாரியர்' என படங்களில் நடித்த போது, யாருப்பா இது... என்று, ரொம்பவே கவனம் ஈர்த்தவர்.இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் நாக சைதன்யாவை வைத்து இயக்கிய, 'கஸ்டடி' திரைப்படத்தில், தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.கோவையில் ஜூலை 12ம் தேதி, 'ஸ்டார் நைட்ஸ் அவுட்' நிகழ்ச்சி நடக்கிறது. அதன் முன்னோட்டமாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இவர், ரசிகர்களின் கேள்விகளுக்கு, தமிழிலேயே பதில் அளித்தது, செவிகளுக்கு திருப்தி.''எனக்கு கோவை மிகவும் பிடித்த ஊர். அது போல, கோவை தமிழும் பிடிக்கும். இப்போது, பிரதீப் ரங்கநாதனுடன், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', கார்த்தியுடன் 'வா வாத்தியார்', ரவி மோகனுடன் 'ஜீனி' ஆகிய நேரடி படங்களில் நடித்து வெளியாக உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறேன்.கொஞ்ச நாள் முன்பு வெளிவந்த, 'மெய்யழகன்' திரைப்படம் பார்த்து வியந்தேன். இயல்பாகவே எனக்கு, கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோரை பிடிக்கும். வில்லேஜ் ரோல் மிகவும் பிடிக்கும். அதை தமிழில் எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.''ஒரு பியூட்டி சிக்ரெட் சொல்லுங்களேன்,'' என்றதற்கு, ''மனதை எப்போதும் 'பாசிட்டிவ்' ஆக வைத்துக் கொண்டால், அழகு தானாகவே வந்து விடும். மனது என்றவுடன் யோகாதான் நினைவுக்க வருகிறது. கோவையில் ஈஷா யோக மையத்துக்கு செல்ல விருப்பம் இருக்கிறது,'' என்றார்.
16-Jun-2025