வாழ்க்கை ஓட்டத்தின் வலிகளை நாம் தெரிந்து கொள்ள நம் பாதங்களை பார்த்தாலே போதும். அதுவும் குறிப்பாக அதிகம் அலைந்து வேலை செய்பவர்கள் நிலையோ இன்னும் மோசம். பாத வெடிப்புகளோ, ரேகைகள் போல் நீண்டு செல்லும். அது மட்டுமல்ல உடலில் பித்தம் அதிகரிப்பதால், சிலருக்கு வெடிப்பு வருவதால், இதை பித்த வெடிப்பு என்றும் அழைப்பதுண்டு. வெடிப்பு வர காரணங்கள் என்னென்ன?உடல் வறட்சி:
பொதுவாக நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில், பெரும்பாலும் தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு உண்டாகும். நமது பாதத்தில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், உள்ளே உள்ள கொழுப்பு அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகிறது என தோல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.துணி துவைப்பது, வீட்டைக் கழுவி சுத்தம் செய்வது, தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் பெண்களின் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். இதனால் தான் வீடுகளில் ஆண்களை விட பெண்களுக்கு வெடிப்பு அதிகமாக காணப்படுகிறது. தொற்றும் காரணம்:சில சமயம் தொற்று காரணமாகவும் பாதங்களில் வலியுடன் கூடிய வெடிப்புகள் இருக்கும். வலியுடன் வெடிப்பு இருந்தால் உடனே கவனிக்க வேண்டும் இல்லையென்றால் இது பரவக்கூடும். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுக்காவிடில் அவை கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பளிக்கும். இதனால் தோல் முற்றிலுமாக கெட்டு போகும் வாய்ப்பு உள்ளது. வெடிப்பில் இருந்து விடுப்பட சில டிப்ஸ்:
• தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில், பாதத்தைக் கழுவி வரவேண்டும் இதனாலேயே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.• குளிக்கும் போது கண்டிப்பாக சொரசொரப்பான கற்களில் பாதங்களை நன்கு தேய்க்க வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கும். தோலும் வலிமை பெறும். • உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 8
முதல் 10 டம்ளர் நீர் பருக வேண்டும். வெடிப்பு அதிகம் இருந்தால் கூடுதலாக
நீர் அருந்த வேண்டும்.• உணவில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
• இரவில்பாதத்தைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தினால் வெடிப்பு தடுக்கப்படும். தேவைப்பட்டால் சாக்ஸ் கூட அணியலாம். • பெட்ரோலியம் ஜெல்லி, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை மாய்ஸ்ச்சரைசராகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.• உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதனால் பாதத்தில் வலி குறையும். நம்மை சுமக்கும் பாதத்தை பாதுகாக்க, கொஞ்சம் அக்கறையுடன் செயல்பட்டால் போதும். ஆரம்பத்திலேயே வெடிப்பிலிருந்து விடுபடலாம்.