உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / உணவு / ஸ்வீட் எடுப்போம்... கொண்டாடுவோம்!

ஸ்வீட் எடுப்போம்... கொண்டாடுவோம்!

தீ பாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன், தெருவில் நடக்கும் போதே தெரிந்து விடும், ஒவ்வொரு வீட்டிலும் என்ன பலகாரம் தயாராகிறது என்று. லட்டு, ரவா லட்டு, பாதுஷா, ஜிலேபி, மைசூர்பாகு, தேங்காய் பர்பி, அதிரசம், சோமாஸ், கோதுமை அல்வா என, அனைத்து இனிப்பு வகைகளும் அம்மா கைபக்குவத்தில் தயாராகி விடும். முறுக்கு, மிக்சர், தட்டை, காரா பூந்தி, ஓமப்பொடி ஆகிய கார வகைகளும், சமையல் அறையை அலங்கரிக்கும். இப்போது அவற்றை நினைத்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது. கடைகளில் விற்பனை என்ன ஸ்வீட் வேண்டும்...என்ன காரம் வேண் டும்...எவ்வளவு வேண்டும்; இன்று அனைத்தும் கடைகளில் சுவையாக தயாரித்து தருகின்றனர். குறிப்பாக லட்டு, மோதி லட்டு, மைசூர்பாக், காஜு கட்லி, பால் இனிப்புகள் என, பாரம்பரிய இனிப்புகளின் விற்பனை, கடைகளில் துாள் கிளப்புகிறது. இதுதவிர, ஜிலேபி, எண்ணெய் லட்டு, ஹல்வா, மலாய் சாண்ட்விச் கேக், ரோஸ் பெட்டல் முந்திரி பிஸ்கட், இனிப்புகளும் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். மிக்சர், காராபூந்தி, முறுக்கு, காராசேவ், கார கடலை, சீவல் உள்ளிட்ட கார வகைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறது. அதிரசம், தேன்குழல், ரவா லட்டு, பாதுஷா உள்ளிட்ட பாரம்பரிய இ னிப்பு வகைகளையும் மக்கள் கேட்டு வாங்கிச் செல்கின்றனர். பாரம்பரியம்மிக்க ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அன்னபூர்ணா, அரோமா நிறுவனங்களில் தரமான ஸ்வீட் ரகங்களை வீட்டு உபயோகத்துக் கு வாங்கவும், நண்பர்களுக்கு, ஊழியர்களுக்கு பரிசாக வழங்கவும் கலர்புல் 'கிப்ட்' பாக்ஸ் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி