உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / உணவு / மீதமாகும் உணவில் வெங்காய சாதம்

மீதமாகும் உணவில் வெங்காய சாதம்

வாசகர்களே வணக்கம்.எல்லாருக்கு தீபாவளி வாழ்த்துகளை சொல்லிக்கிறேன். போன வாரமே சொல்லியிருக்கணும் முடியவில்லை.இப்ப நம்ம கதைக்கு வருவோம். இன்னிக்கு நாம, காலையில பசங்களை ஸ்கூலுக்கு நேரத்துல அனுப்புறதற்கும், திடீர்னு விருந்தாளிங்க வந்தாங்கன்னா உடனடியா செஞ்சி தரவும் 'வெங்காய சாதம்' தயார் செய்யலாமா.

தேவையான பொருட்கள்

சமைத்த சாதம் அல்லது மீதமான சாதம், வெங்காயம், ரசம் பொடி, உப்பு, புளி, வெல்லம், கறிவேப்பிலை, கடுகு, சீரகம், மஞ்சள், கொத்தமல்லி இலைகள். அரை கப் அரிசி2 டீஸ்பூன் சமையல் எண்ணெய்அரை தேக்கரண்டி கடுகுஅரை டீஸ்பூன் சீரகம்7 - 8 கறிவேப்பிலை இலைஒரு பெரிய வெங்காயம்கால் தேக்கரண்டி மஞ்சள் துாள் ஒரு டீஸ்பூன் ரசம் துாள்2 டீஸ்பூன் கொத்தமல்லி தழை ருசிக்கு ஏற்ப புளி, வெல்லம் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு

வழிமுறைகள்

அரிசியை சமைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். கஞ்சியாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்வெங்காயத்தை நன்றாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடாக்கவும். கடுகு மற்றும் சீரகத்துாள் சேர்க்கவும். கறிவேப்பிலையை சேர்க்கவும்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும். வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும். மஞ்சள், உப்பு, ரசம் துாள் சேர்த்து கலக்கவும். ஏற்கனவே பிழிந்து வைத்துள்ள புளிச்சாறை ஊற்றவும். வெல்லத்தை சேர்க்கவும். நன்றாக வதக்கி, அடுப்பை குறைந்த பிளேமில் ஒரு நிமிடம் வைக்கவும்.தயாராக உள்ள சாதத்தை, வாணலியில் போடவும். அதன் மீது ஏற்கனவே நறுக்கி வைக்கப்பட்டுள்ள சிறிது கொத்தமல்லிஇலைகளை துாவவும். நன்றாக கலந்து, அடுப்பை அணைக்கவும். காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் இந்த உணவை ருசி பார்க்கலாம்.நீங்கள் வேண்டுமானால், இன்றோ, நாளையோ கூட செய்து பாருங்கள். குழந்தைகள், இன்னும் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் உங்களை தொந்தரவு செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை