குட்டீஸ்களுக்கு இஷ்டமான பன்னீர் தவா ப்ரை
தினமும் மாலையில் ஏதாவது சிற்றுண்டி சாப்பிடுவது, பலரின் பழக்கம். அவர்களே மறந்தாலும், வயிறு மட்டும் நேரத்துக்கு சரியாக, பசி பசியென கிள்ளி எடுக்கும். நாக்கு சுவையான சிற்றுண்டியை தேடும். 'பன்னீர் தவா ப்ரை' செய்து பாருங்களேன். இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்:பன்னீர் - 200 கிராம்கடலை மாவு - இரண்டு ஸ்பூன்எண்ணெய் - ஒரு ஸ்பூன்மிளகாய் பொடி - 1.1/2 ஸ்பூன்கொத்துமல்லி - ஒரு கைப்பிடிசீரகப்பொடி- 1/2 ஸ்பூன்கரம் மசாலா - 1/2 ஸ்பூன்சாட் மசாலா - 1/4 ஸ்பூன்மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கெட்டித்தயிர் - இரண்டு ஸ்பூன்கஸ்துாரி மேதி - ஒரு ஸ்பூன்உப்பு - சுவைக்கு தக்கபடிசெய்முறைஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு, அதில் இரண்டு ஸ்பூன் சூடான எண்ணெயை ஊற்றி நன்றாக கலக்குங்கள். மிளகாய் பொடி, நறுக்கிய கொத்துமல்லி, சீரகப்பொடி, கரம் மசாலா, சாட் மசாலா பொருட்களை போடுங்கள். அதன்பின் மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, தயிர், கஸ்துாரி மேதியை போட்டு நன்றாக கலக்குங்கள்.இந்த கலவையில் பன்னீரை சிறு, சிறு துண்டுகளாக்கி போடுங்கள். அதை அரை மணி நேரம் ஊற விடுங்கள். அதன்பின் அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றுங்கள். சூடானதும் மிதமான தீயில் பன்னீரை போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுத்தால், சூடான பன்னீர் தவா ப்ரை தயார்.இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி:தேவையான பொருட்கள்:புதினா இலை - ஒரு கப்கொத்துமல்லி - ஒரு கப்பச்சை மிளகாய் - இரண்டுஇஞ்சி - சிறு துண்டுகெட்டியான தயிர் - இரண்டு ஸ்பூன்சீரகப்பொடி - 1/4 ஸ்பூன்சாட் மசாலா பொடி - 1/4 ஸ்பூன்உப்பு, சர்க்கரை - சுவைக்கு தேவையான அளவுசெய்முறை:புதினா, கொத்துமல்லி தழைகள், தயிர், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை மிக்சியில் போடுங்கள். அதில் சீரகப்பொடி, சாட் மசாலா, உப்பு, சர்க்கரையை போட்டு நைசாக அரைத்து கொள்ளுங்கள். பச்சை சட்னியுடன், பன்னீர் தவா பிரையை தொட்டு சாப்பிட்டால், சுவை அள்ளும். உங்கள் வீட்டு குட்டீஸ்கள், இதை செய்து தரும்படி நச்சரிப்பது கேரண்டி.