உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / உணவு / பாரம்பரிய வெஜிடெபிள் பிரியாணி

பாரம்பரிய வெஜிடெபிள் பிரியாணி

வெஜிடெபிள் பிரியாணி ரெசிபி மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கக்கூடிய ஒரு பிரபலமான பாரம்பரிய உணவு வகை ஆகும். மேலும் இது பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்தி சமைக்கப்படுகிறது. இந்த சுவையான பிரியாணி இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பிற பகுதிகளிலும் மிகவும் பிடித்த ஒரு உணவாக உள்ளது.வெஜிடெபிள் பிரியாணி அரிசி, மசாலா மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்படுகிறது, இது தயிர் பச்சடி மற்றும் சாலட் உடன் பரிமாறப்படும் போது சிறந்த சுவை தருகிறது. வீட்டு விசேஷங்களில் அல்லது ஏதேனும் சிறப்பு சந்தர்ப்பங்களில் தயாரிக்க இது ஒரு சரியான தேர்வாகும்.இதை பிரஷர் குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ செய்யலாம். நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகள் சேர்த்து உங்கள் சுவைக்கேற்ப தயார் செய்துகொள்ளலாம். வெஜிடெபிள் பிரியாணி செய்வதற்கான எளிய வழிமுறையை இப்பொழுது பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:1 கப் வெங்காயம்1 கப் காலிபிளவர்1 கப் பீன்ஸ்1 கப் கேரட்1/2 கப் பட்டாணி1 தேக்கரண்டி இஞ்சி விழுது1 தேக்கரண்டி பூண்டு விழுது1 கப் தக்காளி விழுது (பியூரி)தேவையான அளவு புதினா இலைகள்ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகள்4 தேக்கரண்டி நெய்1 கப் தயிர்பட்டை - 23 பிரிஞ்சி இலைகள்கிராம்பு - 5பெருங்காயம் சிறிதுதேவையான அளவு உப்புமிளகாய் தூள் - 3 ஸ்பூன்சீரகம் - 2 ஸ்பூன்தேவையான அளவு தண்ணீர்1 ஸ்பூன் கரம் மசாலா தூள்ஏலக்காய் - 5வறுத்த வெங்காயத் துண்டுகள்1 கப் பாஸ்மதி அரிசிசெய்முறை:ஒரு வாணலியில் அரிசி மற்றும் அதற்கு ஏற்ற அளவு தண்ணீர், உப்பு, பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்க்கவும். நெய் சூடானதும் அதில் சிட்டிகை பெருங்காயம், சீரகம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்க தொடங்கியதும் அதில் ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலைகளைச் சேர்க்கவும்.பிறகு அதில் காலிபிளவர், கேரட், பீன்ஸ் சேர்த்து 2-3 நிமிடங்கள் சமைக்கவும். பின்பு சிறிது உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இப்போது தக்காளி விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.வேறு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வதக்கி வைத்துள்ள காய்கறி கலவையை சேர்த்து அதன் மீது ஒரு அடுக்கு அரிசி சேர்க்கவும். இதே போல் காய்கறி மற்றும் அரிசியை இரண்டு அடுக்காக சேர்த்து கொள்ளவும். பின்பு அதன் மேல் வறுத்த வெங்காயம், புதினா மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.இதை 5 நிமிடம் அடுப்பில் தீயை குறைத்து வைத்து இறக்கினால் சுவையான வெஜிடெபிள் பிரியாணி ரெடி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி