பாதங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றனவா? காரணம் இதுதான்..!
நாம் ஒரே இடத்தில் பல மணிநேரம் அசையாமல் அமர்ந்திருக்கும்போது ரத்தவோட்டம் தடைபடுவதன் காரணமாக கால் மற்றும் பாதங்கள் மரத்துப் போகின்றன. இப்பிரச்னைக்கு மேலும் பல காரணங்கள் உண்டு. கால்கள், பாதங்கள் மரத்துப் போவதற்கான காரணம் மற்றும் தீர்வைக் காண்போம்.உடல் உறுப்புகள் மரத்துப்போவது நோய் அன்று. நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுவதன் அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இரண்டு கால்களும் மரத்துப் போனால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறி ஆகும். ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்னை இருந்தால் அது மரபணுக்களின் கோளாறாக இருக்க வாய்ப்புள்ளது. ஆன்டிபயாடிக், புற்றுநோய் மாத்திரை சாப்பிட்டாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்துப்போகும். மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இப்பிரச்சனை ஏற்படலாம்.