உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / சர்க்கரை, ரத்த அழுத்தம் யோகாவால் ஓடிப்போகும் இலவச பயிற்சி அளிக்கிறார் துரைசாமி

சர்க்கரை, ரத்த அழுத்தம் யோகாவால் ஓடிப்போகும் இலவச பயிற்சி அளிக்கிறார் துரைசாமி

சூலூர் அடுத்த செஞ்சேரி பிரிவை சேர்ந்தவர் துரைசாமி, 49. இவர் விவசாயி மட்டுமல்ல; சித்தா மற்றும் நேச்சுரோபதி டாக்டரும் கூட.இவரிடம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பலர் மாவட்ட, மாநில அளவில் யோகாவில் பரிசு பெற்று அசத்தியுள்ளனர்.டாக்டர் துரைசாமியை சந்தித்து பேசினோம்...''சென்னையில் யோகா ஆசிரியர் ஆசன ஆண்டியப்பனிடம், யோகா கற்றுக் கொண்டேன். 'தினமும், குறைந்தபட்சம், 80 ஆசனங்களை செய்தால் மட்டுமே உனக்கு பலம்' என, அவர் கூறினார். அவற்றை தினமும் செய்வதால் உடலும், மனதும் வலிமை பெறுகிறது,''''நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது; மற்றவர்களும் நன்றாக இருக்கணும் என்ற எண்ணத்தில், கடந்த, 15 வருடங்களாக இலவசமாக, யோகா பயிற்சி அளித்து வருகிறேன்,''''சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு, ஆங்கில மருந்து சாப்பிடுவோருக்கு, சில எளிய யோகா பயிற்சிகளை அளிக்கிறேன். அதன் வாயிலாக அவர்கள் பயன்பெறுகின்றனர்,''''15 நாட்களுக்கு ஒரு முறை அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். உடற்பயிற்சி ஆசிரியர்களும் பயிற்சி எடுத்துக்கொண்டு, பள்ளிகளில் தினமும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்து வருகின்றனர்,''


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை