உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / தனிமையை விரும்புபவரா நீங்கள்? - கண்டிப்பாக இதை படிங்க..!

தனிமையை விரும்புபவரா நீங்கள்? - கண்டிப்பாக இதை படிங்க..!

தனிமை என்பது சிலர் வரம் என்றும் சிலர் சாபம் என்றும் கூறுகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 43 சதவீத இளைஞர்கள், தனிமையை நோக்கி செல்வதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு தனிமையில் உள்ளவர்களில் 63 சதவீதம் பேர், கவலை மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தனிமையை விட சக மனிதர்களுடன் பேசுவது, பழகுவது வாழ்க்கைக்கு நல்லது. தனிமை விரும்பிகள் அமைதியை விரும்புபவர்களாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் பெரிதாக யாரையும் எதிர்பார்க்காதவர்களாகவும் இருப்பார்கள். விருப்பமின்றி அதிக தனிமையில் இருப்பதும் ஆபத்து தான்.தனியாக இருப்பதைவிட விருப்பமான சில மனிதர்களுடன் உரையாடுவது, உங்களது சிந்தனையையும், வாழ்க்கையையும் மேம்படுத்தும். மேலும் மன அழுத்தத்தையும் குறைக்கும். ஆனால் உரையாடுவதற்கும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் சரியான நபரை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். தனிமை அல்லது பிறருடன் இருப்பதைப் பொருத்தே நமது உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது.தனிமையில் இருப்பவர்களை விட பிறருடன் உரையாடி, உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் நபர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தனிமை விரும்பிகளை கட்டாயப்படுத்தி பிறருடன் பழக வைத்தால் அது சரியல்ல. அதேபோல எப்போதும் கூட்டமாக நண்பர்களுடன் இருப்பவர்களுக்கு தனிமையின் சுகம் தெரியாது. எனவே, தனிமையோ, கூட்டமாகவோ விருப்பத்தின் பேரில் இருந்தால் அது நல்வாழ்வுக்கு உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை