உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்

ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் காய்கறிகளில் ஒன்று முட்டைக்கோஸ். தற்போது பரவலான பயன்பாட்டிலுள்ள ஊதா நிற முட்டைக்கோஸிலும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கால்சியம், பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதனை, வாரம் இரு முறையாவது சாப்பிட வேண்டும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் அட்வைஸாக உள்ளது. இதை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். சாலட், சூப் என பல வழிகளில் பயன்படுத்தலாம். எனவே, இதிலுள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ஊதா நிற முட்டைக்கோஸ் வெகுவாக உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. வைட்டமின் ஏ சத்தானது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமின்றி சருமத்தை பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ரத்த அணுக்களில் எண்ணிக்கையை அதிகரிக்கிறது; ரத்த அழுத்தத்தை சீராக்கி கட்டுக்குள் வைப்பதால் மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகள் தவிர்க்கப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் கே, கால்சியம், மாங்கனீசு போன்ற சத்துகள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. உடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, அசிடேட், ப்யூட்ரேட் மற்றும் ப்ரோபியோனேட் போன்ற கொழுப்பு அமிலங்களை ஊக்குவிப்பதால் குடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸை தொடர்ந்து சாப்பிட குடல் புண்களுக்கும் தீர்வு கிடைக்கிறது. இதை ஜூஸாக சாப்பிட சில நாட்களிலேயே வயிற்றுப்புண்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை