மேலும் செய்திகள்
நகங்களில் ஏற்படும் பிரச்னைகள்
23-May-2026
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்
23-May-2026
மொபைல்போன் கதிர்வீச்சு பயன்படுத்துவதில் கவனம்
17-May-2026 | 5
காலை தூங்கி எழுந்தவுடன் உள்ளங்கைகளைக்கொண்டு அழுத்தித் தேய்த்து நமது கண்களைக் கசக்கிவிட்டுப் வெளிச்சத்தைப் பார்க்கும்போது நமது கண் முன்னே சிறிய புழு அளவிலான நிழல்கள் நமது விழியோட்டத்துக்கு ஏற்ப அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருக்கும். நாம் பிரகாசமான வானத்தைப் பார்த்தால் இவை வானத்தில் பறப்பது போலக் காட்சியளிக்கும். இவற்றை உற்று நோக்கி அவை நகரும் பாதையைப் பின்தொடர்ந்தால் அவை வேகமாக நகரும். நாம் நமது குழந்தைப் பருவத்தில் இந்த நிழல்களை துரத்தி விளையாடியிருப்போம். இவற்றின் பெயர் என்ன, இவை எதனால் நமது கண் முன்னே தோன்றுகிறது எனப் பார்ப்போமா? இந்த நிழல்களின் பெயர் ஃப்ளோட்டர்ஸ் (floaters). இவை வட்டம், நீளம், செங்குத்துக்கு வடிவிலோ அல்லது வளைந்த கம்பு, கைத்தடி வடிவிலோ விழித்திரை முன் அங்குமிங்கும் நகரும். நமது கண்களில் கோடிக்கணக்கான சிறு ஆப்டிக்கல் செல்கள் உள்ளன. இவை மூளையின் பின்புறத்தோடு இணைக்கப்பட்டுள்ளன.
23-May-2026
23-May-2026
17-May-2026 | 5