வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிகவும் சிறப்பாக உள்ளது.
மேலும் செய்திகள்
நகங்களில் ஏற்படும் பிரச்னைகள்
23-May-2026
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்
23-May-2026
மொபைல்போன் கதிர்வீச்சு பயன்படுத்துவதில் கவனம்
17-May-2026 | 5
கால்களுக்கு வரும் பல பிரச்னைகளில் ஒன்று பாத எரிச்சல். குறிப்பாக பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்பட்டால் வலியை தாண்டி பாத எரிச்சல் ஏற்படும். இதனால் பாதங்களில் ஓர் எரியும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். சில சமயம் கடுமையான வலியை போல எரிச்சலும் நாம் தாங்க முடியாத அளவிற்கு ஏற்படும். கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறி. பின் அந்த பகுதிகளில் உணர்ச்சி இல்லாமல் இருக்கும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த எரிச்சல் உணர்வு ஏற்படும்.
யாருக்கு எல்லாம் வரும்?
பாதங்களில் உள்ள நரம்புகள் சேதம் ஏற்படுவதால் தான் பாத எரிச்சல் உண்டாகும். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். அதனபாத எரிச்சல் என்றவுடன் சர்க்கரை நோய் இருக்கும் என எண்ண வேண்டாம். சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய்க்காக கீமோதெரபி எடுக்கும் போதும், முடக்கு வாதம், தொற்று, ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி போன்ற பல காரணங்களாலும் நரம்பு சேதம் ஏற்படலாம். இதன் தொடர்ச்சியாக எரிச்சல் வரலாம். ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டாலும் பாத எரிச்சல் உண்டாகும். குறிப்பாக வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் ஏற்படலாம். அதிலும் பி 12 குறைபாடு மற்றும் ஃபோலேட் குறைபாடு இருப்பவர்களுக்கு இப்பிரச்னை வரும். ஆர்த்ரைட்டிஸ் பிரச்னைகளால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதால் பாத எரிச்சல் வரும். மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பாத எரிச்சல் உண்டாகும். 'ஹைப்போ தைராய்டிசம்' இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.சில தீர்வுகள்:
மிகவும் சிறப்பாக உள்ளது.
23-May-2026
23-May-2026
17-May-2026 | 5