மேலும் செய்திகள்
முகத்தில் கரும்புள்ளி தழும்பா...
14-Sep-2025
உணவும், உடற்பயிற்சியும் ஆரோக்கியத்தின் ரகசியம்
29-Jun-2025
தைராய்டு கட்டியை அலட்சியப்படுத்தக் கூடாது
12-Jun-2025
காது பிரச்னைகளை உடனே கவனிக்கவும்
12-Jun-2025
இயற்கையின் அற்புதங்களில் சூரிய சக்திக்கு இடமுண்டு. அத்தகைய சூரிய சக்தி உடலுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புக்களை சரி செய்ய உதவுகிறது. சூரிய குளியலுக்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். காலை 9 மணிக்குள் அல்லது மாலை 5 மணிக்குப் பின், சூரிய ஒளி விழும் இடத்தில் குறைந்தபட்சம் 5 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரை நின்று எடுத்து கொள்ளலாம். சரும நோய் அல்லது ஒவ்வாமை உடையவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது சன்ஸ்கீரின் கிரீம் பயன்படுத்தலாம். சூரிய ஒளி உடலில் உள்ள கழிவுகளை வியர்வை வாயிலாக வெளியேற்றும் என்பதால், உடல் எடையும் குறையும். சூரிய குளியல் போடுவதால் நமக்கு கிடைக்கும் 6 முக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம். 1.எலும்புகளை வலுவாக்கும் : சூரிய ஒளியில் உடலுக்கு தேவையான வைட்டமின் - டி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. எலும்புகள் ஆரோக்கியத்திற்கு, கருவுறுதலுக்கு உடலில் போதுமான அளவு வைட்டமின் - டி இருப்பது அவசியம். மேலும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கத்தை குறைப்பதில் வைட்டமின் - டி முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.2. நீரிழிவை கட்டுப்படுத்தும் : சமீபத்திய ஆய்வு முடிவுகளில், போதுமான அளவு சூரிய ஒளியில் நிற்பது, டைப் 2 நீரிழிவு பாதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கவும், தடிப்பு தோல் அழற்சியை குறைக்க உதவுகிறது. மேலும் வீட்டில் இருப்பவர்களை விட, அதிக நேரம் வெளியே சூரிய ஒளியில் இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
14-Sep-2025
29-Jun-2025
12-Jun-2025
12-Jun-2025