ஆப்பிள் சீடர் வினிகரில் நன்மை..தீமை எது அதிகம்..?
ஆப்பிள் சீடர் வினிகர் என்பது புளித்த ஆப்பிள் சாறு, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனை மக்கள் செரிமானம், நெஞ்செரிச்சல், உள்பட தலைமுடி, சரும பராமரிப்பு, கல்லீரல் கொழுப்பை கரைப்பதற்கு என பலவற்றிற்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் ரத்த செல்களின் நுண்கிருமிகள் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கின்றது. தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்டியோபோரசிஸ் என சொல்லக்கூடிய எலும்பு பிரச்சனை குணமாகுமென கூறப்படுகிறது.நன்மைகள் :
1.ஆப்பிள் சீடர் வினிகரை உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் எடுத்து கொள்கின்றனர். தினமும் சாப்பிடுவதற்கு முன்னால், இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து அருந்துவதுடன், குறைந்த கலோரி உடைய உணவுகள் எடுத்து கொள்வதால் உடல் எடை விரைவாக குறைவது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.2.உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவிபுரிகிறது. நீரிழிவுக்கு மருந்தாக பயன்படுத்த முடியாது. எனினும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
தீமைகள் :
நன்மைகள் போலவே ஆப்பிள் சீடர் வினிகரால் சில தீமைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.