மேலும் செய்திகள்
குளிர்காலத்தில் கைகொடுக்கும் வீட்டுவைத்தியம்
15-Nov-2026
தேனில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
15-Nov-2026
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதின் அவசியம்
14-Nov-2026
அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்பட 6 காரணங்கள்
31-Oct-2026
தம்பதிகள் அல்லது காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருப்பார்கள், ஆனால் அதே சமயம் கடுமையாக சண்டையிட்டும் கொள்வர். அன்பு இருக்கும் இடத்தில் சண்டை ஏன் வருகிறது என மண்டையை பிய்த்துக் கொள்வார்கள். அதற்கு காரணம் ஒருவர் மீதான அதீத எதிர்பார்ப்பு, துணையையே முழுமையாக சார்ந்திருப்பது, முக்கியத்துவம் குறைவது போல் தோன்றுவது, நேரம் செலவிடாமை, வாக்குவாதம் ஆகியவை தான். ஒரு ஆணும், பெண்ணும் உறவை புதிதாக தொடங்குகையில் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். பின்னர் காலப்போக்கில் வேலை பளு, தனிப்பட்ட விருப்பங்கள், நண்பர்கள் போன்ற காரணங்களால் இந்த நேரம் செலவிடுவது குறையலாம். இதனால் துணைகளுக்குள் சண்டை வரும். துணைகளில் யாரேனும் ஒருவர் அப்படி உணர்ந்தால் சண்டைப் போடாமல், கோபமடையாமல், பொறுமையாக நான் தினமும் குறிப்பிட்ட நேரம் உன்னுடன் செலவிட விரும்புகிறேன் என எடுத்துக் கூறி காரியம் சாதித்துக் கொள்ளலாம். அதன் மூலம் அன்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உண்மையிலேயே கடுமையான பணிச்சுமையால் துணை நேரம் செலவிட முடியாமல் இருந்தால் அதனை புரிந்துகொள்ளவும் வேண்டும். வாக்குவாதத்தை தூண்டக் கூடாது
ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக சண்டையிடலாம். சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் முறுக்கிக் கொண்டு திரிந்தால் அந்த உறவும் முறிந்துகொள்ளும்.ஈகோ பார்க்காதீர்கள்
உங்கள் துணையின் நடத்தையோ, வேறு எதுவோ உங்களுக்கு புடிக்கவில்லை என்றால் சண்டையிடுவது நல்லது. வாதம் செய்வதில் வெட்கப்பட தேவையில்லை. சண்டையைப் புறக்கணித்து, மவுனமாக இருப்பது தான் உறவில் நிறைய சேதத்தை ஏற்படுத்தும்.
15-Nov-2026
15-Nov-2026
14-Nov-2026
31-Oct-2026