இந்திய இசை அருங்காட்சியகம்
'இசை எனக்கு அமைதியை கொடுக்கிறது. நான் ஏதோ ஒன்றை நினைத்து கோபப்படும்போது, இசை, என் மனதை உடனடியாக அமைதிப்படுத்தியது. கோபத்தை கடக்க இசை எனக்கு உதவியது' என, மஹாத்மா காந்தி கூறி உள்ளார்.பெங்களூரு ஜே.பி., நகர் ஏழாவது பேசில், 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், மூன்று மாடிகள் கொண்ட கட்டடத்தில், ஒன்பது கண்காட்சி அரங்கம் உள்ளன. 2019ல் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், இந்தியாவின் முதல் இசை அருங்காட்சியகமாகும்.இந்த அருங்காட்சியகம், இந்தியா கலை, கலாசாரத்தின் பன்முகத்தன்மை, அதன் மீது அன்பு, மரியாதையை சித்தரிக்கிறது.பத்து ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின், இந்தியாவின் வளமான இசை பாரம்பரியத்தை பாதுகாக்கவும், இந்திய இசையின் பன்முகத்தன்மையை அறிமுகப்படுத்தவும் ஐ.எம்.இ., எனும் இந்திய இசை அனுபவம் அருங்காட்சியகம் கட்டப்பட்டது.பாரம்பரியம், நாட்டுப்புறம், பாப், பாலிவுட் மற்றும் தற்போதைய காலம் வரை பல்வேறு வகையான இசையை, ஒன்பது கண்காட்சி காட்சியகங்கள் விளக்குகின்றன. இவை கலை நயத்துடன், ரசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.கணினி மயமாக்கப்பட்ட ஆடியோ - விஷுவல் தொடுதிரைகள் மூலம், பாடல்கள், இசை பற்றி கதையை நீங்கள் பார்க்கலாம், கேட்கலாம். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பழங்காலத்து இசை கருவிகள், கலை பொருட்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட, நீங்கள் இசை பிரியராக இருக்க வேண்டியதில்லை.இங்குள்ள ஒன்பது கண்காட்சி அரங்கிற்கும் தி ஸ்டார், ரீச்சிங் அவுட், ஸ்டோரீஸ் த்ரூ சாங்க், சாங்க்ஸ் ஆப் ஸ்டிரகிள், இன்ஸ்டுருமென்ட்ஸ் கேலரி, மெல்டிங் பாட், சாங்க்ஸ் ஆப் தி பீப்புள், லிவிங் டிரெடிஷன்ஸ், கன்டெம்போரரி எக்ஸ்பிரியன்ஸ் பெயர் சூட்டப்பட்டு உள்ளன.பெயருக்கு ஏற்றபடி இந்த கண்காட்சி அரங்கில் இசை கருவிகள், இசை கலைஞர்கள் உட்பட இசை தொடர்பானவை இடம் பெற்றுள்ளன.உதாரணமாக, தி ஸ்டார் அரங்கில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பயன்படுத்திய தம்புரா, பிஸ்மில்லா கானின் ஷெனாய் உட்பட இந்திய இசையின் 100 பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.சாங்க்ஸ் ஆப் ஸ்டிரகிள் அரங்கில், சுதந்திர போராட்டத்தின் போது சுதந்திர தீயை ஊட்ட பாடப்பட்ட 35 வந்தே மாதரம் பாடல்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு மஹாத்மா காந்தி எழுதிய கடிதத்தின் மாதிரி உட்பட போராட்ட பாடங்கள் இடம் பெற்றுள்ளன.இன்ஸ்டிருமென்ட்ஸ் அரங்கில் மயில் வடிவிலான மயூர வீணை உட்பட 100 இசைக் கருவிகள் உள்ளன. அத்துடன், அந்தந்த இசை கருவியின் வரலாறும் இடம்பெற்றுள்ளன. ஒலி தோட்டம்
இங்குள்ள சவுண்ட் கார்டன் எனும் ஒலி தோட்டத்தில், நீங்கள் அதிக நேரம் செலவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள இசை கருவிகளால் ஏற்படும் ஒலி, அதிர்வுகளை கண்டறியலாம்.கற்கள், உலோகங்களை கொண்டு இசையை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை கற்கலாம், கேட்கலாம், உணரலாம். கற்களால் உருவாகும் ஒலி, அதிர்வுகள் உங்கள் ஆன்மாவையும் அமைதிப்படுத்தும்.இங்கு அருங்காட்சியகம் மட்டும் அல்ல, பிரபல கலைஞர்கள் மூலம் இசை, நடன வகுப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி, கர்நாடிக், மிருதங்கம், தபலா, வயலின், வீணை, பரதநாட்டியம், கிட்டார், பியானோ, டிரம்ஸ் என வகுப்புகள் நடக்கின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கற்கின்றனர்.திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் அருங்காட்சியகம் திறந்திருக்கும். வார நாட்களில் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரையிலும்: வார இறுதியில் காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.15_Article_0001, 15_Article_0002, 15_Article_0003, 15_Article_0004
செல்வது?
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் செல்வோர், 215 தொடரில் வரும் பஸ்களில் ஏறி, பிரிகேட் மல்லேனியர் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.மெட்ரோ ரயிலில் செல்வோர், பசுமை பாதையில் இயங்கும் ரயிலில் ஏறி, எலச்சேனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 2.2 கி.மீ., தொலைவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு ஆட்டோவில் செல்லலாம்.அருங்காட்சியிகத்தில் இடம் பெற்றுள்ள இசை கலைஞர்கள். (2வது படம்) இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்களின் புகைப்பட கேலரி. (3வது படம்) பழங்காலத்திய இசை கருவிகள். (கடைசி படம்) ஒலி தோட்டம்.
செல்வது?
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் செல்வோர், 215 தொடரில் வரும் பஸ்களில் ஏறி, பிரிகேட் மல்லேனியர் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.மெட்ரோ ரயிலில் செல்வோர், பசுமை பாதையில் இயங்கும் ரயிலில் ஏறி, எலச்சேனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 2.2 கி.மீ., தொலைவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு ஆட்டோவில் செல்லலாம்.
செல்வது?
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் செல்வோர், 215 தொடரில் வரும் பஸ்களில் ஏறி, பிரிகேட் மல்லேனியர் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.மெட்ரோ ரயிலில் செல்வோர், பசுமை பாதையில் இயங்கும் ரயிலில் ஏறி, எலச்சேனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 2.2 கி.மீ., தொலைவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு ஆட்டோவில் செல்லலாம். - நமது நிருபர் -