உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / பச்சை போர்வை போர்த்திய சக்லேஸ்பூர்

பச்சை போர்வை போர்த்திய சக்லேஸ்பூர்

வாழ்க்கையில் வேலை செய்து கொண்டே நேரத்தை செலவிடக்கூடாது. வாய்ப்பு கிடைக்கும் போது, மனதிற்கு பிடித்த மாதிரி நேரத்தை செலவிட்டால் அதை விட மகிழ்ச்சி வேறு ஏதும் இல்லை. அதிலும் மனதிற்கு பிடித்தமானவர்கள் கூட நேரத்தை செலவழிக்கும் போது, நேரம் போவதே தெரியாது.

3,136 அடி உயரம்

மன அமைதியை தேடி சுற்றுலா செல்வோர் ஏராளம். அப்படிப்பட்ட ஒரு சுற்றுலா தலத்திற்கு செல்வோமா. ஹாசன் மாவட்டத்தின் மலைப் பகுதியில் உள்ளது சக்லேஸ்பூர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ளது. இதை சுற்றி, காபி, ஏலக்காய், மிளகு தோட்டங்கள் உள்ளன.இந்த தோட்டங்கள் உயரமான மலைப் பகுதியில் அமைந்துள்ளன. இதை பார்க்க பச்சை பசேலென காட்சி அளிக்கும். இப்பகுதியில் வெப்பம் சற்று குறைவாகவே உள்ளது. சுற்றுலா செல்வோர் குளிர்ச்சியான சூழ்நிலையை அனுபவிக்கலாம்.சக்லேஸ்பூர், கடல் மட்டத்தில் இருந்து 3,136 அடி உயரத்தில் உள்ளது. சிக்கமகளூரில் தோன்றும் காவிரியின் துணை நதியான ஹேமாவதி ஆறு இங்கு பாய்கிறது.பில்ஸ் காடுகளை உள்ளடக்கிய சக்லேஸ்பூர், உலகில் 18 உயிர் பன்முகத்தன்மை கொண்ட முக்கிய இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

குழு பயணம்

இந்த இடத்திற்கு சுற்றுலோ வருவோர், குழுவாக வந்தால் சூப்பராக இருக்கும். செல்லும் வழியெல்லாம் பசுமையான மரங்களையும், செடிகளையும் பார்வையிட்ட படியே செல்லலாம். புகைப்படம் எடுத்து கொள்வதற்கு உகந்த இடமாக உள்ளது.இப்படிப்பட்ட இடத்தை வெறுமனே பார்ப்பது மட்டுமின்றி, சாகசத்திலும் ஈடுபடலாம்.ஆம்... உண்மைதான், சக்லேஸ்பூர் மலைப்பகுதியில், மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இங்கு வருவோரில் பெரும்பாலானோர் மலையேற்றத்திற்காகவே வருகின்றனர்.மலையேற்றத்தில் அனுபவம் உள்ளோர், அனுபவம் இல்லாதோர் கூட ஈடுபடலாம். கஷ்டப்பட்டு மலையேறுவோர், 'பிஸ்லே வியூ பாயின்ட், ஜெனுகல் குட்டா, ஓம்பட்டு குட்டா, அக்னி குட்டா' போன்ற இடங்களில் இருந்து நகரத்தை அணு அணுவாக ரசிக்கலாம். மலையேற்றத்தை தாண்டி, இங்கு மற்றொரு விஷயமும் உள்ளது. சக்லேஸ்பூருக்கு அருகில், மகஜஹள்ளி, குட்டா, ஹட்லு என மூன்று அழகிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இங்கு சென்றும் ஆனந்த குளியலே போடலாம்.இப்படிப்பட்ட சக்லேஸ்பூருக்கு செல்வதற்கு காலம் தாழ்த்தாமல், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் சென்று ஒரு புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டியது தானே.

எப்படி செல்வது?

ரயில்: மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இருந்து, 16575 என்ற எண் கொண்ட சக்லேஸ்பூர் ரயிலில், வெறும் 100 ரூபாய் டிக்கெட் எடுத்துவிட்டால், நேரடியாக சக்லேஸ்பூருக்கே செல்லலாம்.பஸ்: பெங்களூரில் இருந்து நிறைய டிராவல்ஸ் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு, 600 முதல் 700 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை