உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / மலையேற்றத்துக்கு உகந்தது உத்தரி பெட்டா

மலையேற்றத்துக்கு உகந்தது உத்தரி பெட்டா

துமகூரு மாவட்டம், குனிகலின் தென்கிழக்கில் உத்தரி பெட்டா அமைந்து உள்ளது. இம்மலையை ஹூட்டரி துர்கா என்றும் அழைக்கின்றனர். கர்நாடகாவில் மிகவும் பிரபலமான மலையேற்ற பாதைகளில் ஒன்றாகும்.பெங்களூரில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இம்மலையில், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் மலையேற்றம் செய்து, அழகிய நினைவுகளை அனுபவிக்கலாம். இம்மலையில் இருந்து பார்க்கும் போது, மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்று காட்சி அளிக்கும். நந்தி துர்கா, சன்நாராயண துர்கா, சவன்துர்கா, ஹுட்டாரி துர்கா, கபால துர்கா, ஹுலியூர் துர்கா, தேவராயனதுர்கா, பைரவதுர்கா, உத்தரி பெட்டா ஆகிய ஒன்பது மலைக் கோட்டைகளான இவற்றை, நவதுர்கா என்றும் அழைக்கின்றனர்.இம்மலையில் ஏற, சிறிய கிராமம் வழியாக செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் ஏழு கற்களாலான நுழைவு வாயிலை கடந்து, மலையேற்றத்தை துவக்க வேண்டும். 5 கி.மீ., துாரம் கொண்ட மலையேற்றத்தின் போது, இரு புறமும் பசுமை, இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம்.மலை மீது ஏறும்போது கரடுமுரடான பாதையை கடக்க வேண்டியிருக்கும். கற்கள் மூலம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் பின், பாறைகளில் படிக்கட்டுகள் செதுக்கி உள்ளனர். அதில் ஏறி சிறிது துாரம் சென்றால், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 'சங்கேஸ்வரா கோவில்' அமைந்து உள்ளது.மேலும், பெங்களூரை நிர்மானித்த கெம்பே கவுடா, கோடை காலத்தில் இங்கு ஓய்வெடுப்பார் என்றும், இங்குள்ள குளம் அவரால் அமைக்கப்பட்டது என்றும் கிராமத்தினர் தெரிவித்தனர்.கோவிலை கடந்தால், சிறிய வனப்பகுதியை கடக்க வேண்டும். அங்குள்ள குகைக்குள் சென்றால், மலையின் உச்சிக்கு செல்லலாம்.5_Article_0003, 5_Article_0004, 5_Article_0005

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர், குனிகல் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள உத்தரி பெட்டாவுக்கு செல்ல, ஹூத்ரி துர்கா கிராமத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து நடந்து மலையேறலாம்.மலையேற்றம் துவங்கும் இடத்தில் உள்ள நுழைவு வாயில். (அடுத்த படம்) மலையில் அமைந்து உள்ளது சங்கேஸ்வரா கோவில். (கடைசி படம்) மலை உச்சியில் இருந்து தென்படும் பசுமை இயற்கை அழகு

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர், குனிகல் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள உத்தரி பெட்டாவுக்கு செல்ல, ஹூத்ரி துர்கா கிராமத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து நடந்து மலையேறலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை