மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : கடற்கரையின் தனித்தன்மை
03-Feb-2025
அலுவலக வேலையால், அலுப்பு அடைந்த பலரின் வாழ்வில் புத்துணர்ச்சியும், உற்சாகமும் கொடுக்கும் இடம் தான் ஹொன்னாவர்.உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ளது ஹொன்னாவர். பெயரைப் போலவே இடமும் வித்தியாசமாகவே இருக்கிறது. ஹொன்னாவர் அரபிக்கடல், மேற்கு தொடர்ச்சி மலை இவை இரண்டிற்கும் நடுவில் அழகுற அமைந்து உள்ளது.இங்கு மரம், கடல், அருவி என இல்லாத விஷயங்களே இல்லை. பொதுவாக, அருவிக்காக ஒரு சுற்றுலா, கடற்கரைக்காக ஒரு சுற்றுலா என பலரும் செல்வர். ஆனால், இவை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக ஹொன்னாவர் உள்ளது.உங்கள் கண்களுக்கு விருந்து அளிக்கக் கூடிய வகையிலே இங்கு உள்ள ஒவ்வொரு இடமும் உள்ளன. பாலங்கள், நீர் வீழ்ச்சிகள், கடலோர உணவுகள், மலையேற்ற பாதைகள், சதுப்புநிலக் காடுகள் என அனைத்தும் இருக்கிறது. இதனாலேயே வார விடுமுறை தினங்களில் வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.இங்கு ஒரு மிக நீளமான அற்புதமான ரயில்வே பாலம் உள்ளது. இது 1994ம் ஆண்டு, கட்டப்பட்டது. இதை பார்ப்பதற்கே ஆசையாக உள்ளது. அப்போ, அதில் பயணம் செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்த ரயில்வே பாலம், நம்ம ஊரு பாம்பன் பாலம் போல இருக்கிறது.இந்தியாவில் உள்ள 12 நீலக் கொடி கடற்கரைகளில் ஹொன்னாவரில் உள்ள காசர்கோடு கடற்கரையும் இடம் பெற்று உள்ளது. நீலக் கொடி கடற்கரை என்பது தூய்மையான கடற்கரைகளுக்கு கொடுக்கப்படும் ஒரு சான்றிதழாக கருதப்படுகிறது.
ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் இருந்து ஹொன்னாவர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் செல்லலாம். பின், அங்கிருந்து பஸ் மூலம் சுற்றுலா தளத்தை அடையலாம்.பஸ்: பெங்களூரில் இருந்து ஏராளமான டிராவல்ஸ் பஸ்கள் செல்கின்றன. இதன் மூலம் நீங்கள் ஹொன்னாவரை எளிதில் அடைய முடியும்.
03-Feb-2025