மேலும் செய்திகள்
உயர் ரக கார் வாங்குவது என் சிறு வயது கனவு
29-Jun-2025
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம் லியோ வரும் அக்., 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இன்று லியோ டிரெய்லர் வெளியாகும் நிலையில் விஜய் ரசிகர்கள் டிரெய்லரை யூடியூபில் காண ஆவலாக உள்ளனர். வழக்கமாக விஜய் படங்களின் டிரெய்லர் வெளியான சில மணிநேரங்களுக்குள் யூடியூபில் பல மில்லியன் வியூக்களைப் பெரும். லியோ திரைப்படத்தின் ஸ்டில்கள் முன்னதாக தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டன. இந்த ஸ்டில்களில் விஜய், அர்ஜுன் ஆகியோர் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் விஜய் ரசிகர்களாக உள்ள நிலையில் இந்த உச்ச நடிகர்கள் புகைப்பிடிப்பது போன்ற ஸ்டில்கள் வெளியானது முன்னதாக இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. தங்களது ஆதர்ச நடிகர்கள் இவ்வாறு நடிப்பதால் இதனைப் பார்த்து பலர் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகலாம் என பலர் விமர்சித்து இருந்தனர். எக்ஸ் வலைதளத்தில் அதிகளவு ஃபாலோயர்கள் கொண்ட திரைப்பட விமர்சகர்கள் உட்பட பலர் இந்த புகைபிடிக்கும் ஸ்டில்கள் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட பல படங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோ, வில்லன் கதாபாத்திரங்கள் புகைப்பிடிப்பது, போதை வஸ்துகள் பயன்படுத்துவது போன்ற செயல்களை விலாவாரியாகக் காண்பித்து இருப்பார்.
29-Jun-2025